இவர் தான் ‘Eliminate’ ஆகி இருக்கனும்.! நியாயம் தோற்றுப்போகும் .! காமெடி நடிகர் அதிரடி.!

0
428
Ramya-Bigg-Boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மமதி மற்றும் அனந்த் வைத்யநாதனுக்கு பிறகு வெளியேற்றபட்ட நித்யா மற்றும் ரம்யாவின் எலிமினேஷன் மக்கள் ஏற்றுகொள்ளவில்லை. அதிலும் சென்று வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஐஸ்வர்யா தான் வெளியேற்றபடுவார் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் ரம்யா வெளியேற்றபட்டது குறித்து பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

Ramya

- Advertisement -

இந்நிலையில் ரம்யாவிற்கு பதில் ஐஸ்வர்யா தான் வெளியேற்றபட்டிருக்க வேண்டும் என்று காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்”நான் ஐஸ்வர்யா என்று தான் நினைத்தேன். ரம்யா, புறம் பேசல நெகடிவ்வா எதும் பண்ணல” என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல பிண்ணனி பாடகரான க்ரிஷ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிக்கையில் ” உன்னால் முடிந்த வரை சிறப்பானதை தான் தந்தாய் ரம்யா, நியாயமா இருந்த சில நேரம் அதுவும் தோத்துப்போகும். பரவாயில்லை உன்ன மீண்டும் வீட்டில் பார்ப்பது மகிழ்ச்சி. ” என்பது போல பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து நித்யா வெளியேற்றப்பட்ட போது மக்கள் அனைவருமே அந்த வாரம் நாமினேஷனில் இருந்த யாஷிகா தான் வெளியேற்றபட்டிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தனர். தற்போது ரம்யா வெளியேற்றபட்டதையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதை பார்க்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது ஒரு நெகடிவ் எண்ணத்தை ஏற்படுத்துகிறது

Advertisement