விஜய் மகனுக்கு ஜோடியாக நடிப்பது குறித்து பேசி மாட்டிக்கொண்ட ரவீனா – எப்படி சமாளித்துள்ளார் பாருங்க

0
129
- Advertisement -

விஜய் மகன் இயக்கும் படத்தில் பிக் பாஸ் பிரபலம் கைகோர்க்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்திருக்கிறது. அந்த வகையில் கடைசியாக விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த லியோ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இதை எடுத்து தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து விஜய் அவர்கள் தளபதி 69 என்ற படத்தில் நடிக்கிறார். இது தான் இவருடைய கடைசி படம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் மகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் தகவல் தான் சமீப காலமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய்.

- Advertisement -

ஜேசன் சஞ்சய் குறித்த தகவல்:

அதனை தொடர்ந்து இவர் விஜய் படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து இருந்தார். பின் இவர் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படித்து முடித்து இருக்கிறார். மேலும், இவர் சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. இதுவரை இவர் ஜங்க்ஷன் மற்றும் சிரி என்ற குறும்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த இரண்டு குறும்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இவர் இறுதியாக இயக்கிய ‘Pull The Trigger’ என்ற குறும்படம் நன்றாகவே இருந்ததது .

ஜேசன் சஞ்சய் இயக்கும் புது படம்:

மேலும், இதற்கு முன்னர் இவர் இயக்கிய குறும்படங்களை விட இதில் தரமும் நன்றாகவே இருந்தது. தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் புது படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது. இப்படி முதல் படத்திலேயே மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் சஞ்சய் கைகோர்த்து இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

அதோடு இந்த படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தற்போது இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்ற அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்த நிலையில் விஜய் டிவி பிரபலம் சஞ்சய் படத்தில் இணைந்திருக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரவீனா பேட்டி:

அவர் வேறு யாரும் இல்லை, பிக் பாஸ் பிரபலம் ரவீனா தாஹா தான். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் சார் மகனுடைய இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்கப் போறீங்களா? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு ரவீனா, அய்யா அந்த வீடியோவை திரும்பவும் பாருங்கள். எந்த நடிகருடன் நடிக்க ஆசை என்று கேட்டார்கள். நான் விஜய் சார் கூட நடிக்கணும் என்று ஆசை. ஆனால், அவருடன் நடிக்க முடியுமா? என்று தெரியவில்லை. அவர் பையன் கூடையாவது நடிக்க முடியுமா என்று பார்ப்போம் என்று தான் சொன்னேன். தயவுசெய்து அந்த வீடியோவை திருப்பி பாருங்கள். தேவையில்லாமல் புரளியை கிளப்பாதீர்கள் என்று நகைச்சுவையாக பேசி இருந்தார்.

Advertisement