சாதிப்பெயரா ‘தங்கலான்’ ? அதன் வரலாறு என்ன ? – இயக்குனர் ரஞ்சித் பட தலைப்பு பற்றிய ஒரு தேடல்.

0
6318
- Advertisement -

விக்ரம்-ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் தங்கலான் படத்தின் பெயருக்கான உண்மையான அர்த்தம் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் “கோப்ரா”. இந்த படத்தில் வித விதமான கெட்டப்புகளில் விக்ரம் வருகிறார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பொன்னியின் செல்வன். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது.

- Advertisement -

விக்ரம்-ரஞ்சித் கூட்டணி:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது விக்ரம் அவர்கள் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டது. இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு தங்கலான் என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள்.

தங்கலான் அர்த்தம் தேடல்:

இந்த நிலையில் “தங்கலான்” என்ற டைட்டிலின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான தகவல் ஒன்றை மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி, தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரில் உள்ள ஊர்க்காவலர்களை குறிக்கும் சொல் தான் “தங்கலான்”. கோலார் தங்க வயலை மையமாக வைத்து எடுக்கப்படுவது தான் “தங்கலான்” திரைப்படம். ஆதலால் தான் “தங்கலான்” என டைட்டில் வைத்துள்ளதாக பலரும் கூறி வந்தனர். மேலும், தங்கலான் தலைப்பிற்கு அர்த்தம் என்ன? என்று திரைப்பட ஆர்வலர்கள், விமர்சகர்களும் இணையத்தில் தேட ஆரம்பித்தார்கள். சென்சஸ் ஆப் பிரிட்டிஷ் இந்தியா என்ற நூலில் 84 பறையினர் உட்பிரிவுகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

தங்கலான் குறித்த அர்த்தம்:

இதில் தமிழ் பேசும் பறையினர் குழுக்கில் 59 ஆவது பிரிவாக தங்கலான் பறையன் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தங்கலான் என்பது ஊர் காவலன் என்று பொருள். இரவு நேரங்களில் ஊரை சுற்றி வருவதும், அந்த ஊரை சாராதவர்கள் ஏதாவது ஊருக்குள் வந்தால் அதை தெரியப்படுத்துவதும் இவர்களுடைய வேலை. இந்த பொறுப்பில் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் தென் மாவட்டங்களில் இருந்ததாக வரலாற்றில் கூறப்பட்டது. இன்று வரைக்கும் கிராமங்களில் பொதுக் கோவில் திருவிழாக்களின் மரியாதைகளில் காவல்காரன் என்று அழைக்கப்பட்டு விபூதி வழங்கும் நடைமுறையும் இருக்கிறது. தலித் சமூகம் அதிகம் இருந்த பகுதிகளில் காவல் காக்கும் பொறுப்பு அவர்களிடம் வழங்கப்பட்டிருந்தது.

படத்தின் கதை:

தென் மாவட்டங்களில் காவல் காக்கும் பொறுப்பை தலித்திடம் ஒப்படைத்து இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தில் தங்கம் சுரங்கத்தை மையமாக வைத்து பா ரஞ்சித் கதை எடுப்பதாகவும் கூறியிருந்தார். அதனால் தங்கத்தை தோண்டி எடுப்பது, அதற்கான நிலப்பகுதிகள் யாருக்கு சொந்தம் என்ற அடிப்படையில் பூர்வ குடிகள் தலித் சமூகம் தான் என்று திரைக்கதையில் முன்னிறுத்தப்படுமா? ஆங்கிலேயர்கள் எதிராக போராடியவர்களுக்கு தலைமை தாங்கியது தலித் சமூகர்கள் தான் முன்மொழிவார்களா? என்ற விவாதங்கள் தொடரப்பட்டிருக்கிறது. இதனால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Advertisement