பிக் பாஸிற்கு பின் ரேஷ்மாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.. யார் படத்தில் பாருங்க..

0
20468
reshma

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் ‘ புஸ்பா புருஷன்’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடையை அதிகமாகப் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. ரேஷ்மா சென்னையில் பிறந்தவர். இவருடைய அப்பா தெலுங்கு தயாரிப்பாளர் ஆவார். இவர் முதலில் விமானத்தில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொண்டு இருந்தார். பின்னர்,படிப்படியாக முன்னேறி சின்னத்திரை,வெள்ளித்திரை என அனைத்திலும் கலக்கி கொண்டு வருகிறார்.ரேஷ்மா அவர்கள் செய்திவாசிப்பாளர், நடிகை, மாடலிங், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். இவர் முதன்முதலில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலம் ஆனார்.

Image result for bigg boss reshma

அதோடு முதலில் ரேஷ்மா அவர்கள் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார். இதனை அடுத்து இவர் சினிமா துறையில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். இதற்கு பின்னர் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும்,ரேஷ்மா நல்ல முறையில் விளையாடி வந்தார்.பிக் பாஸ் வீட்டில் எப்பவுமே நான் நடுநிலையாக இருப்பேன் என்று கூறி இருப்பார்.ஆனால் அவர் கூறிய வார்த்தையே பிக் பாஸ் வீட்டிலுருந்து எலிமினேட் செய்ய காரணமாக இருந்தது என்ற கருத்தும் இணையங்களில் பரவியது.அதுமட்டுமில்லைங்க பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது ரேஷ்மா அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கூறியது மக்கள் மனதை உலுக்கும் அளவு இருந்தது.அவர் அமெரிக்காவில் இருக்கும் போது தன்னுடைய குழந்தை இருந்தது என்ற சம்பவத்தில் இருந்து இன்னும் மீளவில்லை என்று கூறினார்.

இதையும் பாருங்க : நான் தர்மத்துக்கு வந்தனா.. ஒழுங்கா கொடுத்துருங்க.. விஜய் டிவிக்கு மிரட்டல் விட்ட மீரா..

- Advertisement -

அந்த அளவிற்கு அவருடைய வாழ்க்கையில் பல சோகங்கள் நடந்துள்ளது.இந்த நிலையில் அவருடைய வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை கேட்டு குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்கள். அந்த அளவிற்கு பல துன்பங்களையும் துக்கங்களையும் கடந்து வந்தவர். ஆனாலும், ரேஷ்மா தனது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஒரு போதும் விட்டதில்லை.அதோடு ரேஷ்மா ஒரு தனி பெண்ணாக இருந்து இந்த சமுதாயத்தில் தன் குடும்பத்தையும் பார்த்து கொள்கிறார். இவரின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர் நெட்டிசன்கள்.’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற படத்தில் சூரிக்கு ஜோடியாக ‘புஷ்பா’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் தான் பெரிய அளவில் பிரபலம் ஆனார் என்று கூட சொல்லலாம்.

அது மட்டும் இல்லைங்க தற்போது காமெடி நடிகர் யோகி பாபுவுடன் காதல் கொண்டுள்ளார் என்ற வதந்தியும் பரவி வருகிறது. இது குறித்து அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் ஒரு சில படங்களில் கமிட்டாகி உள்ளார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து தற்போது அவர் டிவி சேனலில் காமெடியில் ‘என்னம்மா இப்படி பண்றிங்களேமா’ டயலாக் இன் மூலம் பிரபலமான ராமருடன் இணைந்து படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது. மேலும், இதை உறுதி செய்வதற்காக அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார் ரேஷ்மா.

-விளம்பரம்-
Advertisement