இறுதியாக தனது சகோதரர் பாபி சிம்ஹாவுடன் சேர்ந்த ரேஷ்மா.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

0
28129
reshma
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு சில நடிகர், நடிகைகளும் பங்கேற்று உள்ளனர். அதில் ரசிகர்களுக்கு பரிட்சியமான ஒருவர் ரேஷ்மாவும் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை பெரிதாக சர்ச்சையில் சிக்காமல் இருந்து வந்தார் ரேஷ்மா, இருப்பினும் சாக்க்ஷி வெளியேறிய முன் வாரத்தில் தான் ரேஷ்மா வெளியேறியிருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-15.png

ரேஷ்மா வெளியேறிய போது 1 கோடியே 30 லட்சம் வாக்குகள் விழுந்ததாகவும், வெறும் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் ரேஷ்மா வெளியேறியதாகவும் கமல் கூறியிருந்தார். இருப்பினும் ரசிகர்களால் இதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதையும் பாருங்க : ஆணவ பேச்சு பேசிய வனிதா.! வச்சி செய்த கமல்.! கைதட்டிய ரசிகர்கள்.! 

- Advertisement -

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரைத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரேஷ்மா பசுபதி.

மேலும், வம்சம்’, `வாணி ராணி’, `ஆண்டாள் அழகர்’, `மரகத வீணை’ போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் ரேஷ்மா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போது ரேஷ்மா தனது குடும்ப வாழ்கை பற்றியும், குழந்தைகளை பற்றியும் பேசி இருந்தார். ஆனால், இவர் பிரபல நடிகர் பாபி சிம்மாவின் தங்கை என்பது பலரும் அறிந்திடாத ஒரு விஷயம். அதே போல பாபி சிம்மாவின் திருமணத்தில் கூட ரேஷ்மா கலந்து கொள்ளவில்லை.

-விளம்பரம்-

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரேஷ்மா, பாபி சிம்ஹா குறித்து பேசுகையில், என்னை எதாவது பேசுவாங்களே’ என்பதற்காகவே இங்கிருக்கும் சொந்த பந்தங்களுடைய விசேஷங்களுக்கு பெருசா போனது இல்ல. பாபி சிம்ஹா எனக்கு தம்பி முறைதான். சின்ன வயசுல நாங்க 25, 30 பேர்னு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். இப்போதும், அப்படியே இருந்திருக்கலாமேனு யோசிப்பேன். அதெல்லாம் அழகான நினைவுகள் என்று கூறியுள்ளார்.

Advertisement