குடும்பம் கஷ்டப்படும்னா எதுக்கு பிக் பாஸ் உள்ள வந்த ரியோ – சிம்பு பட நடிகர் போட்ட பதிவு.

0
1288
rio
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல இந்த சீசனில் எக்கச்சக்க விஜய் டிவி பிரபலங்களும் போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் ரியோவும் ஒருவர். விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ரியோ. கனா காணும் காலங்கள் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடவே ரியோ ராஜ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒருமுகமாக மாறிவிட்டார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் சன் மியூசிக், சரவணன் மீனாட்சி, விஜய் டிவி தொகுப்பாளர் என்று ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்றார். நண்பர்கள். ரியோ பிக் பாஸில் கலந்து கொண்ட பின்னர் ஆரம்பத்தில் ரியோவிற்கு நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், சமீபகாலமாக இவரது பெயர் டேமேஜ் ஆகி வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு போட்டியாளர்களை காரணத்தோடு நாமினேட் செய்திருந்தார்கள். இதில் ஆரி பாலாஜியின் பெயரை நாமினேட் செய்தபோது பாலாஜிக்கு காதல் கண்ணை மறைக்கிறது என்று கூறியிருந்தார்.

- Advertisement -

அனைவரும் நாமினேட் செய்தபின்னர் இந்த வாரம் போட்டியாளர்கள் குறிப்பிட்டு சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் பிக்பாஸ் அனைவர் முன்பும் அறிவித்திருந்தார் அப்போது காதல் கண்ணை மறைக்கிறது என்று பிக்பாஸ் சொன்ன போது அது தன்னை யாரோ குறிப்பிட்டுச் சொன்ன வார்த்தைதான் என்று யூகித்த பாலாஜி இங்கே காதல் எல்லாம் எவனும் பண்ணல அப்படி ஏதாவது யாராவது சொன்னதாக என் காதில் விழுந்தால் நான் அப்புறம் நன்றாக கேட்பேன் என்று கூறியிருந்தார் இதனால் கொஞ்சம் கடுப்பான ரியோ யாரோ இரண்டு பேர் சொன்னதற்கு அவர் எப்படி அனைவர் முன்பும் இப்படி பேசலாம் ஒரு மனுஷன் என்ன வேண்டுமானாலும் பேசி விட்டு செல்வான் எனக்கும் குடும்பம் இருக்கிறது அவர்கள் இதையெல்லாம் பார்த்து கஷ்டப்பட மாட்டார்களா என்று கூறியிருந்தார்.

ஒருகட்டத்தில் பாலாஜி சிவானி பேசிக்கொண்டு இருக்கும்போதே கண்ணாடி கதவை காலால் எட்டி உதைத்து மிகவும் கோபமுடன் சென்றார் ரியோ. அதன்பின்னர் ஜியோ மற்றும் பாலாஜி இருவரும் ஒன்றாக அமர்ந்து இந்த விஷயம் குறித்து பேசினார்கள் அப்போது பாலாஜி நான் காதை அறுப்பேன் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்று கூறியிருந்தார். அதன் பின்னர் ரியோ மன்னிப்பும் கேட்டார். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள நடன இயக்குனரும் நடிகருமான சதிஷ் குடும்பம் பாக்குறாங்க அவங்க பீல் பண்ணுவாங்கனா எதுக்கு பிக்பாஸ் உள்ள போனீங்க புரியலையே இந்த சீசன் மிகவும் போராக இருக்கிறது. சிவானி, அர்ச்சனா, சுசித்ரா, ரியோ, சம்யுக்தா, நிஷா, ஆஜித் ஆகிய 7 பேர் ஓரு சிலரின் பிக் பாஸ் வாய்ப்பை கெடுத்துவிட்டார்கள்.

-விளம்பரம்-

Advertisement