பன்னி என்று குறிப்பிட்டு ரித்விகாவின் ஜாதியை கிண்டல் செய்த ரசிகர் – ரித்விகா கொடுத்த செருப்படி பதில்.

0
5967
Rithvika
- Advertisement -

சமுதாயத்தில் இருக்கும் ஜாதிகளை ஒழிக்க பலரும் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர் ஆனாலும் ஜாதிக் கொடுமைகள் ஜாதி கௌரவக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கருப்பர் கூட்டம் விவகாரம், பெரியார் சிலை மீது காவி சாயம் போன்ற பல்வேறு சர்ச்சைகளும் நாம் கடந்து தான் வந்திருக்கிறோம். இப்படி ஒரு நிலையில் நடிகை ரித்விகாவின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு சமூக வலைதள வாசி ஒருவர் மோசமாக கமன்ட் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-
View this post on Instagram

#selfclicked? #selflove #stayhome #smile?

A post shared by Riythvika Kp (@riythvika_official) on

நடிகை ரித்திகா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான பரதேசி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு சிறந்த துணை நடிகை என்பதற்கான விருதுகளும் கிடைத்திருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதையும் பாருங்க : பீசு பீசா கிழிக்கும் போது இயேசு போல பொறும பாரு – லட்சுமி ராம்கியை பாட்ஷா bgm-ஐ போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.

- Advertisement -

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரித்திவிகா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இதற்கு இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் ‘பருவத்தில் பன்னி கூட அழகா தான் இருக்கு எஸ்சி (sc )பெண்களே’ என்று ரித்விகாவின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு படுமோசமான கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த ரித்திவிகா சரிங்க மிஸ்டர் பாடு, சாரி மிஸ்டர் மாடு என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

ரித்விகா இதுபோன்ற கேள்விகளை எதிர் கொள்வது எளிதான விஷயம் கிடையாது ஏற்கனவே இவர் பிக்பாஸ் பட்டத்தை வென்ற போது பலரும் இவரது ஜாதிப் பெயரை கூகுளில் தேடிப் பார்த்தார்கள் அப்போது பதிலளித்த ரித்திவிகா,ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா என்று பதிலடி கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement