தொலைக்காட்சி ரசிகர்களின் மாபெரும் பொழுது போக்கு நிகழ்ச்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவு பெற இருக்கிறது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், மதுமிதா, சாக்க்ஷி, அபிராமி, ரேஷ்மா, கவின், சேரன், வனிதா, தர்ஷன் என்று 12 போட்டியாரல்கள் வெளியேறிய நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர்.
https://www.youtube.com/watch?v=BRNOqGIskUk
இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 2 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும். இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள்.
இதையும் பாருங்க : போட்டியில் இருந்து வெளியேறினாலும் கவினுக்கு பிக் பாஸ் கொடுத்த விருது.! மற்றவர்களுக்கு என்ன தெரியுமா ?
இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ் . பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வண்ணம் இருந்தனர். அந்த வகையில் நேற்றய நேற்றய நிகழ்ச்சியில் கவின் மற்றும் தர்ஷன் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்திருந்தனர். மேலும், நாளை பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் இன்று மாபெரும் கொண்டாட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
https://www.instagram.com/p/B3QY1nNBsrK/
பொதுவாக பிக் பாஸ் இறுதி கொண்டாட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இறுதி போட்டியில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இறுதி போட்டியில் வெற்றி பெற போவது யார் என்று முடிவு செய்ய இருக்கும் இறுதி போட்டி இன்று மாலை 6 மணிக்கு துவங்க இருப்பதாக கமல் அறிவித்திருந்தார்.
மேலும் , அதே ப்ரோமவில் பிக் பாஸ் கோப்பையை ஒரு பெண்ணின் கை ஏந்தி இருந்தது. அதே வேறு யாரும் இல்லை கடந்த பிக் பாஸ் சீசன் டைட்டிலை வென்ற ரித்விகா தான். இறுதி போட்டி என்பதால் கடந்த சீசன் வின்னர் ரித்விகா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இந்த சீசனுக்கான பிக் பாஸ் கோப்பையை இறுதி போட்டியாளருக்கும் அறிமுகம் செய்துள்ளார். மேலும், ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு செல்ல இருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க கடந்த வெள்ளிக்கிழமையுடன் வாக்கு பதிவு நிறைவடைந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை 2 மணிக்கு துவங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் எண்டிமால் குழுவின் முக்கிய உறுப்பினர், விஜய் டிவி சார்பாக ஒருவர் மற்றும் 5 முக்கிய ஸ்பான்சர்ஸ் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இறுதி போட்டியின் ஷூட்டிங் இன்று மாலை 3 மணிக்கு தான் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.




