நம்ம தமிழ் பொண்ணு ரித்விகாவோட இப்போதைய ஸ்டைல பாருங்க.!

0
10509
Rithvika
- Advertisement -

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் ஒரு தமிழ் பெண் என்ற ஒரே ஒரு வார்த்தையை கூறி பெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார் மதுமிதா. ஆனால், தமிழ் பொண்ணு என்ற இந்த சொல்லுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதை போட்டது நம்ம ரித்திகா தான்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரித்விகா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், அந்த சீசனில் முதல் இடத்தையும் பிடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பக்கா தமிழ் பெண்ணாக இருந்த இவர் தற்போது படு மாடர்ன் ஆகியுள்ளார்.

இதையும் பாருங்க : ஹாலிவுட்டில் நடிக்கும் நெப்போலியன்.! ஜோடிய பாருங்க.! தனுசுக்கு கூட இப்படி அமையல.! 

- Advertisement -

தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை தான் ஒரு தமிழ் பெண் என்று அடிக்கடி தன்னை அடையாள படுத்திக்கொண்டே இருந்தார் ரித்விகா. சொல்லப்போனால் அந்த அடையாளம் தான் இவருக்கு வெற்றியை ஏற்படுத்தி தந்தது. ஆனால், சமீப காலமாக மாடர்ன் உடைகளில் அசத்தி வருகிறார்.

-விளம்பரம்-

Advertisement