லாஸ்லியா குறித்து முன்னாள் பிக் பாஸ் வின்னர் ரித்விகா போட்ட ஸ்டேட்டஸ்.!

0
80832
Losliya
- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வந்தவர் நடிகை ரித்விகா. இவர் பிக் பாஸ் சீசன் 2 வில் பட்டம் வென்றாலும் பிக் பாஸ் வீட்டினுள் இவர் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக தான் இருந்தார் என்றும் பிரச்சனைகளில் இருந்து விலகி இருந்தார் என்றும் ரசிகர்கள் கூறிவந்தனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இதே பாணியை தான் தற்போது பிக் பாஸ் வீட்டினுள் லாஸ்லியா பின்பற்றி வருகிறார். பரிட்சயம் இல்லாத ஒரு சில போட்டியாளர்களும் இந்த சீசனில் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையைச் சேர்ந்த செய்தி தொகுப்பாளரான இவர் தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலான ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராக இருந்து வருகிறார்.

இதையும் பாருங்க : இயக்குனர் விஜய்யின் இரண்டாம் திருமண தேதி அறிவிப்பு.! பெண் யார் தெரியுமா.? 

- Advertisement -

இவருக்கு தற்போது சமூக வலைதளத்தில் பல ஆர்மியும் இருக்கிறது.லாஸ்லியா அழகா இருப்பதால் அவருக்கு இவ்வளவு சப்போர்ட் இருக்கிறது என்று ஒரு சிலரும், லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எது நடந்தாலும் அதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது இல்லை என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

அதே போல பிக் பாஸ் வீட்டினுள் பெரிய சண்டை வந்தால் கூட அதில் கலந்து கொள்வது இல்லை லாஸ்லியா. இதனால் இவரை கடந்த பிக் பாஸ் வின்னரான ரித்விகாவுடன் இணைத்து ஒரு மீம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது அந்த மீமை ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எனவே, ரசிகர்கள் சொல்வதை ரித்விகா ஏற்றுக்கொண்டு விட்டாரா என்ற எண்ணம் தோன்றுகிறது.

-விளம்பரம்-
Advertisement