கார் ஓட்டுநர் மீது புகார் அளித்த ரித்விகா. இவருக்கும் இந்த பிரச்சனையா ?

0
13509
rithvika
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் டைடல் வின்னரான ரித்விகா கார் ஓட்டுனர் குறித்து புகார் கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் நடிகை ரித்திகா. பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான பரதேசி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு சிறந்த துணை நடிகை என்பதற்கான விருதுகளும் கிடைத்திருந்தது.

-விளம்பரம்-

அதன் பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு 2018 ஆம் ஆண்டு வெளியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பெயர் சொல்லும்படியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை தமிழ் கலாச்சாரத்தை பற்றியும் தமிழ் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் அடிக்கடி கூறிக் கொண்டே வந்தார் ரித்திவிகா.

இதையும் பாருங்க : ஸ்லீவ்லஸ் மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்த சொக்க வைத்த சரவணன் மீனாட்சி நடிகை.

- Advertisement -

சொல்லப்போனால் ரித்திகா தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசியதால் தமிழ் அல்லாத போட்டியாளர்களான யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா மும்தாஜ் போன்றவர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும், ஒரு கட்டத்தில் இந்த நிகழ்ச்சியில் தமிழ் பெண்கள் தான் ஜெயிக்க வேண்டும் என்று இவரும் ஜனனியும் பேசிக்கொண்ட விஷயம் அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ரித்விகா உபேர் ட்ரைவர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

Image

சென்னை போன்ற முக்கிய நகரங்களில் உபர், ஓலா போன்ற கார் சேவை மையங்கள் நகரம் முழுவதும் கட்டண கார் போக்குவரத்தை பரபரப்பாக நடத்தி வருகிறது. இதில் பயணம் செய்த பல வாடிக்கையாளர்கள் அடிக்கடி உபர் ஓட்டுனர்கள் குறித்து புகார் அளித்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் நடிகை ரித்விகா, தனது ட்விட்டர் பக்கத்தில், உபர் கார் ஓட்டுனர் ஒருவரின் விவரத்தை பதிவிட்டு புகார் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில், ஊபர் ஒரு பாதுகாப்பு இல்லாத பயணம். ஓட்டுநர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். மேலும், காரின் கண்டிஷனும் மிகவும் மோசமாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார்ரித்விகா, TN07AR4798 என்ற கார் எண்ணையும் பதிவிட்டிருக்கிறார். அதற்கு கீழே தான், பயணம் செய்த அந்த குறிப்பிட்ட காரின் விவரத்தையும், அந்த காரை ஓட்டிய ஓவர் டிரைவரின் புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார். ரித்விகாவின் இந்த புகாரை ஏற்ற உபேர் நிறுவனம் தங்களுக்கு புகாரை தனிப்பட்ட முறையில் தெரிவிக்கவும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்று பதிலளிக்கிறார்கள்.

Advertisement