சினிமாவில் தான் முதல் பாகம், இரண்டாம் பாகம் என்று பார்த்திருப்போம். ஆனால், சீரியலில் பல பாகங்களை கண்ட சீரியல் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் தான். இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் ரஷிதா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த தொடர் இவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது.
இந்த தொடரில் எத்தனையோ சரவணன் கதாபாத்திரம் மாறினாலும் இறுதி வரை இவர் மட்டுமே மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் ரசிதாவிற்கு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. இதுவரை இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் 2015 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான ‘உப்பு கருவாடு’ படத்திலும். அதே ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘பாரிஜாதா’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதன் பின்னர் வேறு எந்த பட வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவிலை. சரவணன் மீனாட்சி முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது ரஷீதா எந்த ஒரு சீரியலிலும், சினிமாவிலும் நடிக்கவில்லை. அதனால் பெண்களுடன் இணைந்து ஏதாவது தொழில் தொடங்கலாம் என்று முடிவெடுத்து வீடியோ ஒன்றை கூட வெளியிட்டிருந்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாச்சியார்புரம்’ என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்த தொடரில் ரஷிதாவின் கணவர் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பையும் பெற்று வருகிறது. சீரியல் படங்கள் என்று நடித்தாலும் ரஷிதா எப்போதும் தனது குடும்பபாங்கான லுக்கை மெயின்டைன் செய்து வந்தார். ஆனால், சமீபத்தில் இவர் மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.