இந்த பொண்ணு பார்த்தாலே கடுப்பாகுது- ரசிகரின் கமன்ட்டிற்கு ரித்விகா பதிலடி.

0
11411
bigg-boss-tamil-2-rithvika
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பெரிய அளவு பிரபலமானவர் நடிகை ரித்விகா. பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ‘பரதேசி’ என்ற படத்தில் ரித்விகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த துணை நடிகை என்பதற்கான விருதையும் பெற்றார். அதன் பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

-விளம்பரம்-
View this post on Instagram

@helo_indiaofficial @helo_tamilofficial

A post shared by Riythvika Kp (@riythvika_official) on

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் ஆனார் ரித்விகா. சமீபத்தில் வெளியான குண்டு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரித்விகா நடித்து இருந்தார். தமிழ் பிக் பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு வெற்றி கோப்பையை தட்டிச் சென்ற ரித்விகாவுக்கும், பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளர்கள் கலந்து கொண்ட இயக்குனர், நடிகர் சேரனுக்கும் விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் நவீன் அவார்டு என்ற விருது வழங்கும் விழா ஒன்று நடை பெற்றது.

- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை தமிழ் கலாச்சாரத்தை பற்றியும் தமிழ் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் அடிக்கடி கூறிக் கொண்டே வந்தார் ரித்திவிகா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி ஹீரோயினாக இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

இருப்பினும் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.ஒரு சில பேர் மூஞ்ச பார்த்தாலே கோவமா வரும். அந்த ஆளு தான் இந்த பொண்ணு பாத்தாலே கடுப்பாகுது என்று கமன்ட் செய்திருந்தார். அதற்கு பதில் அளித்த ரித்விகா, உன் மூஞ்சிய பர்ஸ்ட் பாரு அப்புறம் உயிரோடு இருந்தா பேசு என்று கூறியுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is ruth.jpg

ஏற்கனவே நடிகை ரித்விகா இது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்திற்கு கீழ் ரசிகர் ஒருவர் ஐயோ பாவம் பட வாய்ப்பு இல்லாமல் வெட்டியாக இருக்காங்க என்று கமெண்ட் செய்திருந்தார். ரசிகரின் இந்த கமெண்ட்டை பார்த்து மிகவும் கடுப்பான ரித்விகா மூடிட்டு போடா என்று அந்த ரசிகரை திட்டிய தோடு நடுவிரலை காட்டி படுமோசமாக பதிலளித்திருந்தார் என்பது குறியிடத்தக்கது.

Advertisement