வெளியே வந்த சாக்க்ஷி.! கவின் மற்றும் லாஸ்லியா குறித்து என்ன கூறியுள்ளார் பாருங்க.!

0
9887
sakshi-about-los

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சாக்க்ஷி நேற்று வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை இவர் போட்டியாளர்கள் பற்றி புறம் பேசிகொண்டே இருந்ததால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டு வந்தார். இருப்பினும் ஒவ்வொரு வாரமாக எப்படியோ எலிமினேஷனிலிருந்து தப்பித்து கொண்டே வந்தார். இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் இவர் வெளியேற்றப்பட்டார்.

ஆரம்பத்தில் கவினுடன் நெருக்கம் காட்டி வந்த சாக்க்ஷி அதன்பின்னர் அவர் லாஸ்லியாவிடம் நெருக்கம் காண்பித்ததால் கொஞ்சம் கவின் மீது கோபம் கொண்டார். இருப்பினும் இப்படி கவின் சாக்க்ஷி லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதல் ஒரு சில வாரங்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தது. இறுதியில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து சாட்சியை ஓரம் கட்டி விட்டனர்.

இதையும் பாருங்க : வெளியானது இந்த வார நாமினியின் லிஸ்ட்.! இந்த வாரம் இவர்கள் தான்.! 

- Advertisement -

ஆரம்பத்தில் கவின் தான் சாக்ஷிக்கு பல்வேறு பரஸ்பர நம்பிக்கைகளை அளித்து வந்தார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல லாஸ்லியாவின் பக்கம் சென்று விட்டார். இதனால் ஒரு கட்டத்தில் கவின் மற்றும் சாக்க்ஷி இருவருக்கும் மிகப் பெரிய சண்டை ஒன்றும் வெடித்தது. கவின் உடன் சண்டையிட்டதால் லாஸ்லியாவும் சாக்ஷியை புறம் தள்ளினார். இதனால் லாஸ்லியா மற்றும் கவின் மீது கடும் கடுப்பில் இருந்தார் சாக்க்ஷி.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்துள்ள சாக்க்ஷி ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார். அதில் கவின் மற்றும் லாஸ்லியா குறித்து பதிலளித்துள்ள சாக்க்ஷி, கவின் தன்னை பயன்படுத்திக் கொண்டார் எனவும், லாஸ்லியாவின் உண்மையான முகம் விரைவில் வெளியில் வரும் என்றும், கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் இணைந்து என்னை பாழாகிவிட்டனர் என்றும் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement