ரெண்டு வருசத்துக்கு முன்னர் இதே நாளில் இந்த மாஸ் நடிகருடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள சாக்ஷி.

0
570
sakshi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த சீசனில் அதிகம் பேசப்பட்டு வந்த விஷயம் என்னவென்றால் கவினின் காதல் கதைதான். லாஸ்லியாவிற்கு முன்னதாக கவின் மற்றும் சாக்ஸியின் காதல் கதைதான் வைரலாக பேசப்பட்டு வந்தது. அதன் பின்னர் கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு பிரிவு ஏற்பட்டு விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சாக்ஷி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமும் அடைந்தார்.

-விளம்பரம்-

வட மாநிலத்தைச் சேர்ந்த இவர், மாடல் அழைத்து வந்தார். இதுவரை 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். பின்னர் 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஓராயிரம் கேணல் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், சூப்பர் ஸ்டாரின் காலா படத்தில் கூட நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இருந்து பாதியில் விலகிய நடிகை – யாரு தெரியுமா ?

- Advertisement -

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார் நடிகை சாக்ஷி அகர்வால். காலா படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி. இந்த நிலையில் சாக்ஷி இன்று (ஜூலை 20) தனது பிறந்தநாளை கொண்டாடியுளளார். மேலும், இதே நாளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காலா படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன் கொண்டாடியுள்ளார் சாக்ஷி. அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement