7ஜி ரெயின்போ காலனி படத்தில் இருந்து பாதியில் விலகிய நடிகை – யாரு தெரியுமா ?

0
2531
7g
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர். நடிகர் தனுஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் இந்த அளவிற்கு உயர்ந்து இருப்பதற்கு இவர் தான் காரணம். இவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி, இரண்டாம் உலகம் போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளது.

-விளம்பரம்-
7g

2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். அதிலும் இந்த படத்தில் சோனியா அகர்வால் நடித்த அனிதா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் மறக்க முடியாது.

இதையும் பாருங்க : புடவை போர் அடிச்சிடுச்சி போல – Jockey உள்ளாடைகளில் புகைப்படத்தை வெளியிட்ட தர்ஷா.

- Advertisement -

சமீபத்தில் காதல் கொண்டேன்’ திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் சோனியா அகர்வால் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அப்போது 7ஜி ரெயின்போ காலனி படம் குறித்து ஸ்வாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், காதல் கொண்டேன் படத்தின் போதே 7ஜி ரெயின்போ காலனி படம் குறித்து தனுஷ் மற்றும் செல்வராகவனிடம் பேசியிருக்கிறேன்.

மேலும், அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அப்போதே அவரிடம் சொல்லிவிட்டேன். அந்த படம் உருவானபோது நான் கோவில் படத்தின் சூட்டிங்கில் இருந்தேன். அப்போது ரத்னம் சார்கிட்ட இருந்து அழைப்பு வந்தது. நீங்க தான் இந்த படத்தில் நடிக்க போறீங்கன்னு சொன்னாங்க. அப்படி வந்ததுதான் இந்த படத்தில் வாய்ப்பு. எனக்கு முன்னால் அந்த படத்தில் சுப்பிரமணியபுரம் சுவாதி நடித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர்களால் தொடர முடியாததால் அந்த படத்தில் அவருக்கு பதிலாக நான் நடிக்கச் சென்றேன் என்று கூறியுள்ளார் சோனியா அகர்வால்.

-விளம்பரம்-
Advertisement