நேற்றய பிக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியது. இதில் ஹவுஸ்மேட்ஸ்கள் சிலர் தங்கள் பெயரும் நாமினேட்டினில் வந்து விட்டதே என்று புலம்பி கொண்டிருந்தனர். குறிப்பாக சாக்ஷி மற்றும் கவின் தான் தங்களை யார் நாமினேட் செய்திருப்பார் என்று புலம்பி கொண்டே இருந்தனர். இருவரும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து இதை பற்றி டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் தனியாக பேசிக்கொண்டிருக்கும் கவின் மற்றும் சாக்க்ஷி கவினிடன் என்னை யார் நாமினேட் செய்திருப்பார்கள் என்று அலச வேண்டும் என்று கூறியதும். உடனே சி ஐ டி லெவலுக்கு யோசிக்கும் கவின், ஒன்று மீரா மற்றொருவர் பாத்திமாவாக இருக்கலாம், ஏனென்றால் அவரிடம் நீ ஒரு முறை பரோட்டாவிற்காக ஒரு கொஞ்சம் வாக்கும் வாதம் செய்தாய் அதை மனதில் வைத்து பாத்திமா உன்னை நாமினேட் செய்திருக்கலாம் என்றார்.
இதையும் பாருங்க : பிக் பாஸ் ஷெரினின் முன்னாள் காதலரை பார்த்துளீர்களா.! காதலருடன் ஷெரினின் புகைப்படம்.!
இது சாக்ஷிக்கு கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்த இறுதியில் இரவு தூங்குவதற்கு முன்பாக அபிராமி மற்றும் ஷெரீனை அழைத்து பேசிய சாக்க்ஷி , நான் உங்களிடத்தில் தானே அந்த பரோட்டா மேட்டர் பத்தி பேசினேன் அது எப்படி மத்தவங்க காதுக்கு போயிடுச்சி என்று அபிராமியிடம் கேட்ட சாக்க்ஷி நீ என்னிடம் ஒரு ரகசியம் சொன்னால் அது என் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை வெளியில் போகாது.
ஆனால், நான் ஒரு சிஷயம் உங்கிட்ட சொல்றேன் என்றால் அது ஏன் வெளிய போகுது. அதே போல என் பெயரை நாமினேட்டினில் கேட்டவுடன் உன் ரியாக்ஷன் சரியில்லை. அதற்கு பதில் சேரன் நாமினேட் அனாதை நினைத்து நீ ஷாக் ஆகினாய். நான் உன் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தேன் என்னை பற்றி நீ யோசிக்கவில்லை என்றதும் என்னை பற்றி உனக்கு நல்லா தெரியும். உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் அதை நிரூபிக்க வேண்டுமா சொல்லு என்றார் அபிராமி. அதற்கு சாக்ஷியோ நீ ஏதும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை எதுவாக இருந்தாலும் மனசில் இருந்து வர வேண்டும் என்று கூறிவிடுகிறார்.
அபிராமி மற்றும் சாக்ஷிக்கு இந்த மனவருத்தம் ஏற்பட முக்கிய காரணம் கவின், சாக்ஷியிடம் பாத்திமா பாபு, உன்னை நாமினேட் செய்திருக்கலாம் என்று சொன்னதால் தான். உண்மையில் பாத்திமா பாபு, ஷாக்ஷியை நாமினேட் செய்யவே இல்லை அதே போல ஷாக்ஷிக்கு என்ன கோபம் என்றால் பாத்திமாவை குறித்து அபிராமியிடம் சொன்னது கவனிடம் அபிராமி சொல்லி இருக்கிறார் என்பது தான். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு சிறு பிளவு ஏற்பட்டுள்ளது. இது தொடருமா இல்லை சமாதானத்தில் முடியுமா என்று காத்திருந்து பார்க்கலாம்.