பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்த மூன்று போட்டியாளர்கள்.! செத்தார் கவின்.!

0
24682
bigg
- Advertisement -

கடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று வனிதாவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் அனைவரையும் சீண்டிவிட்டு அவர்களுக்கு சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார். மேலும் கடந்த சில நாட்களாகவே கவினை டார்கெட் செய்து வருகிறார் வனிதா.

-விளம்பரம்-

நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதிலும் இந்த சீசனில் இரண்டாவது முறையாக ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. அதில் கவின், முகேன், லாஸ்லியா, சேரன், ஷெரின் ஆகியோர் இந்தவார நாமினேஷன் இடம்பெற்றிருந்தனர்.

இதையும் பாருங்க : இந்த வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா.! இளம் நடிகைகளையே மிஞ்சிய ரம்யா கிருஷ்ணன்.! 

- Advertisement -

மேலும், நேற்றைய நிகழ்ச்சியில் கவின், ஷெரின் மற்றும் சேரனைநாமினேட் செய்திருந்தார். ஆனால், அதற்கு கவின் கூறியிருந்த காரணம் வனிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் வனிதா மற்றும் கவின் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. கவினை குறை கூறியதால் கடுப்பான கவினின் தோழி லாஸ்லியா, வனிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவிலும் வனிதா, கவின் விஷயத்தை பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தார். மேலும், மைக்கை கழட்டி வைத்த வனிதா பிக் பாஸிடம் வாக்கு வாதமும் செய்தார். இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினர்களாக சாக்க்ஷி மற்றும் அபிராமி உள்ளே நுழைந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement