பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த புதிய போட்டியாளர்.! வெறுப்பை கக்கிய சாக்ஷி, அபிராமி.!

0
1162
Sakshi-Abhirami

காதலும் கலகலப்புமாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று மனக்கசப்பும் சலசலப்புமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே இன்று புதிய போட்டியாளராக களமிறங்கிய மீரா மிதுன் தான். அவர் உள்ளே நுழைந்ததும் சாக்ஷி மற்றும் அபிராமி முகத்தில் அப்படி ஒரு வெறுப்பே தெரிந்தது.

நடிகை மீரா மிதுனை பலரும் அறிவர், சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீரா மிதுன். அதற்கு முன்பே ‘8 தோட்டாக்கள்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.

இதையும் பாருங்க : கவினிடம் தனது காதலை மறைமுகமாக கூறிய அபிராமி.! கவின் சொன்ன பதில் இது தான்.! 

- Advertisement -

இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் மீரா மீதுன் நுழைந்ததும் அவருக்கு நேற்று போட்டியாளர்களுக்கு வைக்கப்பட்ட மாலை அணிவிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு மீரா மிதுனை சங்கடபடுத்த வேண்டும் என்றே சில டாஸ்குகளை கொடுதார் சாக்ஷி. இதனை கண்ட ரசிகர்கள் அனைவருக்கும் கொஞ்சம் ஷாக்காகவே இருந்தது.

பின்னர் அபிராமியை தனியாக அழைத்த சேரன், ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேட்டார். அதற்கு அபிராமியோ, என்னை அவளுக்கு முதலில் இருந்தே தெரியும் ஆனால், என்னை தெரியாதது போல நடிக்கிறாள் என்றால். உண்மையில் சாக்ஷி மற்றும் மீரா மிதுன் இடையே என்ன தான் பிரச்சனை என்பது போக போக தான் தெரியும்.

-விளம்பரம்-
Advertisement