கவினிடம் தனது காதலை மறைமுகமாக கூறிய அபிராமி.! கவின் சொன்ன பதில் இது தான்.!

0
982
Abirami-Kavin

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்கும், சண்டைக்கும் பஞ்சமே இருந்தது இல்லை. அதே போல காதல் ஜோடிகளுக்கும் பஞ்சமே இருந்தது இல்லை. முதல் சீசனில் ஓவியா ஆரவ், இரண்டாவது சீசனில் யாஷிகா மஹத், ஐஸ்வர்யா ஷாரிக் இப்படி பலர். அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் ஒரு புதிய லவ் ஸ்டோரி ஒன்று லேசாக தீப்பிடிக்க துவங்கியுள்ளது.

அது வேறு யாரும் இல்லை கவின் மற்றும் அபிராமி தான். தற்போது இவர்கள் இருவரது காதல் டாபிக் தான் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் ஷெரினுடம் பேசிய அபிராமி, கவின் மீது தனக்கு காதல் இருப்பதாக கூறியிருந்தார். மேலும், கவினை சரவணன் மீனாட்சி தொடரில் இருந்தே தெரியும் என்றும் அவரும் நானும் நீண்ட நாள் முக நூல் நண்பர்கள் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் கவின் மேல் இருக்கும் காதலை, கவினிடம் இன்று நேரடியாக சொன்னார் அபிராமி. அப்போது இங்கு இருக்கும் அனைவர்க்கும் உன் மீது நான் காதல் வைத்துள்ளது தெரியும் உனக்கு மட்டும் அது புரியவில்லையா என்று அபிராமி கேட்க, அதற்கு ஒன்றும் புரியாதது போல சிறிது நேரம் பாவலா செய்தார் கவின்.

இதனால் கோபமடைந்த அபிராமி அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார். பின்னர் அவரை பின் தொடர்ந்து சமாதானம் செய்து முயற்சிசெய்த கவின் , உன்னுடைய உணர்வை நான் மதிக்கிறேன். ஆனால், என்னிடம் இன்னும் 15 நாள் பழகினால் என்னை உனக்கு பிடிக்காமலும் போகலாம் எனவே, நான் உன்னிடம் ஆசை வார்த்தை காண்பித்து உன்னை நோகடிக்க விரும்பவில்லை என்று கூறுகிறார். அதற்கு அபிராமியும், மனதை தேற்றிக்கொன்டு, சரி நாம் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறிவிடுகிறார். இருப்பினும் சக போட்டியாளர்கள் மத்தியில் கவின் பற்றி புலம்பி வந்து கொண்டே தான் இருக்கிறார் அபிராமி.

-விளம்பரம்-
Advertisement