அடுத்த நாளே அஜித் பட ஷூட்டிங். மறக்க முடியாத புகைப்படங்களை பகிர்ந்த ‘பிக் பாஸ்’ நடிகை.

0
923
sakshiajith

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகள் எல்லாமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ஹீரோவாக நடிக்கும் படங்களாக இருந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு லக் தமிழ் திரையுலகில் ஒரு நடிகைக்கு அமைந்தது. அதை பற்றி அவரே மறக்க முடியாத சில நிகழ்வுகள் என்று சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார்.

அந்த நடிகை யார் தெரியுமா? அவர் நம்ம ‘பிக் பாஸ்’ புகழ் சாக்ஷி அகர்வால் தான். தமிழ் திரையுலகில் 2013-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘ராஜா ராணி’. ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்திருந்த இந்த படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் மிக சிறிய ரோலில் வலம் வந்திருந்தார். இது தான் நடிகை சாக்ஷி அகர்வால் அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம்.

இதையும் பாருங்க : அஜித் மருத்துவமனையில் இருந்தபோது கேட்டு ஓகே செய்த கதை. எந்த படம் தெரியுமா?

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ‘சாஃப்ட்வேர் கண்டா’ என்ற கன்னட படத்தில் நடித்தார் சாக்ஷி அகர்வால். அதன் பிறகு தமிழில் ‘யூகன்’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதில் ஹீரோவாக யஷ்மித் நடித்திருந்தார். ‘யூகன்’ படத்துக்கு பிறகு ‘திருட்டு VCD, ஆத்யன், ககக போ’ என அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடித்தார் சாக்ஷி அகர்வால்.

அதன் பிறகு நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு அடித்தது மிகப் பெரிய ஜாக்பாட். ஆம்.. அடுத்ததாக சாக்ஷி அகர்வால் நடித்த படம் ‘காலா’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கியிருந்தார். இப்படம் நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனெனில், இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : வல்லவன் படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் 2 பிரபலம். இதுவரை இவரை நோட் செய்துள்ளீர்களா ?

-விளம்பரம்-

‘காலா’ படத்துக்கு பிறகு மீண்டும் சாக்ஷி அகர்வாலுக்கு லக் என்ற விஷயம் கைகூடி வந்தது. ஆம்.. அடுத்ததாக அவர் நடித்த படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். இதுவும் சாக்ஷி அகர்வாலுக்கு ஸ்பெஷல் படமாக அமைய காரணம், இதில் கதையின் நாயகனாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ‘தல’ அஜித் நடித்திருந்தது தான்.

கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவின் சீசன் 3-யில் நடிகை சாக்ஷி அகர்வாலும் ஒரு போட்டியாளராக இருந்தார். தற்போது, சாக்ஷி அகர்வால் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ரஜினியின் ‘காலா’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களில் நான் நடித்தது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள். ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நானும் கலந்து கொண்டேன். சரியாக அதற்கு அடுத்த நாள் ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங்கில் நான் கலந்து கொண்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement