தென்னிந்திய சினிமா உலகில் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பி.வாசு. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், திரைப்பட கதாசிரியர் என பன்முகங்களை நடிகர், இவருடைய திரைப்படங்கள் எல்லாமே வணிக ரீதியாக வெற்றி அடைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.பி வாசு தமிழில் ஒரு வெற்றிகரமான இயக்குனராக திகழ்ந்த போதிலும் இவரது மகன் சக்தியால் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிகரமான நடிகராக வர முடியவில்லை.
ஷக்தி அவர்கள் தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.இதன் பின் பல படங்கள் நடித்து உள்ளார். ஆனால், சக்திக்கு அழகும் திறமையும் இருந்தும் சினிமாவில் பட வாய்ப்புகள் சொல்லி கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றாலே பட வாய்ப்புகள்அதிகம் வரும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பலருக்கும் அப்படி நடந்துவிடுவது இல்லை. இப்படி ஒரு நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சக்தி, தன்னுடைய கம் பேக் குறித்து பேசி இருக்கிறார். அதில்,. அந்த நிகழ்ச்சியில் பல்வேறு செலிபிரிட்டி கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உள்ளே போன பின்பு தான் தெரிந்தது அந்த வீட்டில் நான் ஒருத்தன்தான் ஹீரோ ஓவியா ஒருத்தர் மட்டும் தான் ஹீரோயின். ஆனால், அவரை நல்லவராக காட்டி விட்டு என்னை கெட்டவராக காட்டிவிட்டார்கள் அதைப் பற்றி தற்போது நான் கவலைப்படவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் எனக்கு நிறைய பெண் ரசிகைகள் இருந்தனர். பிக் பாஸுக்கு முன்னர் பெண் ரசிகைகள் என்னை சக்தி சார் என்று அழைப்பார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் என்னிடம் பெண் ரசிகைகள் ஓவியா போல நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.அதே போல நான் பல படங்களை மிஸ் செய்து இருக்கிறார். களவாணி, ஆயிரம் விளக்கு, தம்பிக்கோட்டை, நெஞ்சிருக்கும் வரை போன்ற பல படங்களின் வாய்ப்பை இழந்துவிட்டேன்.
நான் கிட்டத்தட்ட 12 படத்தை நான் மிஸ் செய்தேன். அதில் 8 படம் ஹிட் ஆனது. இடையில் என்ன செய்வது என்று தெரியாமல் படம் பார்ப்பது சாப்பிடுவது தூங்குவது என்று இருந்துவிட்டேன். ஆனால், இப்போது உடல் எடையை குறைத்து இருக்கிறேன். எனக்கு என்னை பற்றி தெரியும், நான் என்ன ரோல் கொடுத்தாலும் பண்ணுவேன். தற்போது ஒரு படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன் அதுவும் ஒரு லீடிங் ஹீரோவிற்கு, அதற்காக தான் இந்த மாற்றம் எல்லாம்.
இன்னொரு படத்தில் ஒரு வித்யாசமான வில்லனாக நடிக்கிறேன். அதிலும் அது ஒரு feminse ஆன ரோலில் நடிக்கிறேன். முதல் முறையாக இப்படி ஒரு ரோலில் நான் நடிக்கிறேன். அது வேற மாதிரி இருக்கும் என்று கூறியுள்ளார். விரைவில் ஒரு நல்ல Come Backஐ கொடுப்பேன் என்ற நம்பியோடு திரும்பி இருக்கிறார்.