தற்போது இருக்கும் காலகட்டத்தில் நடிகர் நடிகைகள் அணைவரும் தங்களுக்கு என்று யூடுயூப் சேனல்களை கட்டாயம் வைத்து வருகின்றனர். அதிலும் சின்னத்திரையில் இருக்கும் பலர் யூடுயூப் சேனலை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் என்றால் கட்டாயம் யூடுயூப் சேனலை ஆரம்பித்துவிடுகின்றனர். ஒரு சில சின்னத்திரை நடிகைகள் சின்னத்திரையில் சம்பாதிப்பதைவிட யூடுயூபில் மாதா மாதம் ஒரு நிலையான வருமானத்தை ஈட்டி விடுகின்றனர். இப்படி அந்த லிஸ்டில் சமீபத்தில் இடம்பிடித்து இருப்பவர் சம்யுக்தா.
சம்யுக்தாவும் ஹோட்டல் சர்ச்சையும் :
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 4ல் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர்.
முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்த சீசனில் பாலாஜி, சம்யுக்தா, சோம் சேகர் என்று ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதில் சம்யுக்தா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சந்திரகுமாரி’ தொடரில் நடித்து இருக்கிறார்.சம்யுக்தாவிற்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.
ஆரியால் நாரிய பெயர் :
அவர் பிறந்து ஆறு மாதத்திலேயே நான் ரேம்ப் வாக் செய்ய வந்துவிட்டேன் என்று சம்யுக்தா பிக் பாஸில் கலந்துகொண்ட போது கூறி இருந்தார். பிக் பாஸில் ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஆதரவு இருந்தது. ஆனால், இவர் பாலாவுடன் சேர்ந்து ஆரியை டார்கெட் செய்ய ஆரம்பித்ததும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குறைந்தது.
சீரியல் மற்றும் பட வாய்ப்புகள் :
அதிலும் ஆரி விஷயத்தில் கலீஜ் மற்றும் வளர்ப்பு மேட்டர் இவர் மீது ரசிகர்களுக்கு வெறுப்பை உண்டாக்கியது. பொதுவாக பிக் பாஸ் பிரபலங்களுக்கு சினிமா வாய்ப்பு வருவது வாடிக்கையான ஒன்று தான்.அந்த வகையில் நடிகை சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். அதே போல விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் ஒளிபரப்பான துக்லக் தர்பார் படத்திலும் நடிகை சம்யுக்தா நடித்து இருந்தார்.
ஆடம்பர உணவு :
இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடி இருந்தார். இதை தொடர்ந்து ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சம்யுக்தா தனது யூடுயூப் பக்கத்தில் திருவனந்தபுரத்தில் இருக்கும் உலக புகழ்ப்பெற்ற, பல விருதுகளை சொந்தமாக்கிய பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு மதிய உணவு உண்ண சென்றார். அந்த ஹோட்டல் தான் அவருடைய ஃபேவரெட் ஹோட்டலும் கூட.
ஒரு வேலை உணவு 5000 :
இந்த ஹோட்டலை சுற்றி காட்டியப்படி அவர் அங்கு இருக்கும் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டார். இதை ஒருபக்கம் வீடியோவாகவும் ஷூட் செய்து கொண்டிருந்தார்.எல்லா உணவுகளையும் ருசி பார்த்த பின்பு அதற்கான பில்லையும் அவர் பே செய்தார். மொத்தம் ரூ. 5000 என பில்லையும் காட்டினார். அதுதான் சர்ச்சைக்கு காரணமாகவிட்டது. ஒருவேளை உணவுக்கு ரூ. 5000 செலவு செய்வது எல்லாம் ஓவர் என்று அந்த வீடியோவுக்கு கீழ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் ”ரூ. 5000 இருந்தால் நாங்கள் 2 மாசத்துக்கு சாப்பிடுவோம் என்று கமன்ட் போட்டு வருகிறார்கள்.