விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர், அதில் சனம் ஷெட்டியும் ஒருவர். நடிகை சனம் ஷெட்டி நடிகை என்பதை விட மக்கள் மனதில் பிரபலமானது தர்ஷனின் காதல் விவகாரத்தில் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் இருந்தபோது நடிகை சனம் ஷெட்டி தான் தான் தர்ஷன் இன் காதலி என்று அடிக்கடி கூறி வந்தார். அதேபோலத் தர்ஷனுக்கு ஆதரவாக பல்வேறு வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தங்கள் இருவருக்கும் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது என்று சனம் ஷெட்டி ஆதாரங்களை வெளியிட்டார்.
தர்ஷன் மீது சனம் ஷெட்டி மோசடி புகாரை அளித்து இருக்கிறார் இந்த வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்காக காத்துகொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், உங்கள் திருமணம் எப்போது என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சனம். ஒரு பழைய பழமொழி இருக்கிறது நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்று அது என்னுடைய விஷயத்தில் உண்மை என்னையும் ஒருவர் காதலித்தார் ஆனால் எதுவும் நடக்கவில்லை ஒருவேளை ஒரு நாள் எனக்கான சரியான நபர் வரும்போது அது நடக்கும் என்று நம்புகிறேன் என்று உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் பாருங்க : 37 ஆண்டுக்கு பின் தன் படத்தில் நடித்த சிறுவர்களை சந்தித்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட நதியா. (அந்த பசங்க வயசான மாதிரி ஆகிட்டாங்க, ஆனா நதியா)
கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு ஆண் ஒருவருடன் கொண்டாடியுள்ளார். அந்த பதிவில் என் உலகத்தை பிரகாசமாக்கி விட்டாய் மோனி. காதலர் தின டின்னருக்கி நன்றி ‘என்று குறிப்பிட்டிருந்தார். சனம் ஷெட்டியின் இந்த பதிவை பார்த்து இவர் தான் உங்கள் புதிய காதலரா என்று பலரும் கமன்ட் செய்து வருகின்றனர். அனிதா சம்பத்தும் இதற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சனம் ஷெட்டி குறிப்பிட்ட இருந்த அந்த ‘மோனி’ யார் என்று பலரும் ஆவலாக தேடிவந்தனர். ஆனால், சனம் ஷெட்டி பிக் பாஸில் இருந்த போதே அவரை பற்றி பேசியுள்ளார். மேலும், மோனி தன்னுடைய கடினமான காலங்களில் தன்னுடன் இருந்ததாகவும், அவர் என்னுடைய நல்ல நண்பர் தான் ஆனால், அவர் அதை விட முக்கியமானவர் என்று கூறி இருந்தார். அதே போல சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் பிறந்தநாளை கொண்டாடிய போது கூட மோனி, வாழ்த்து அட்டை ஒன்றை அனுப்பிய போது ஐ மிஸ் யூ, ஐ லவ் யூ என்று அப்போதே தனது காதலை சொல்லியுள்ளார் சனம்.