பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரின் பேவரைட்டாக இருந்து வருகிறார் சாண்டி. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே போட்டியாளர்கள் அனைவரிடமும் ஜாலியாக இருந்து வருகிறார் சாண்டி. ஆனால்,சேரனிடம் மட்டும் சாண்டி கொஞ்சம் முரணாகவே நடந்து வருகிறார்.
இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே சாண்டிக்கு சேரன் மீது ஒரு விதமான வெறுப்பு இருப்பதை நம்மால் உணர முடிந்தது. இதற்கு முக்கிய காரணமே சேரனின் மகள் தான் என்று கூறப்படுகிறது. ஆம், சேரனுக்கு செல்வராணி என்ற மனைவியும், நிவேதா மற்றும் தாமினி என்று இரண்டு மகள்கள்இருக்கின்றனர்.
இதையும் பாருங்க : குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட அருண் விஜய்.! வனிதாவின் கமெண்டை பாருங்க.!
இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சேரனின் இளைய மகள் தாமினி சூளைமேட்டை சேர்ந்த டான்சர் சந்துருவை இயக்குநர் காதலித்தார். ஆனால், இவர்கள் காதலுக்கு சேரன் சம்மதிக்காததால் சேரன் மீது தாமினி போலீசில் புகார் அளித்திருந்தார். இதனால் சேரனை போலீசார் விசாரித்தனர்.
ஆனால், சந்துருவின் நடவடிக்கைகள் சரியல்ல என்பதால் மகளின் காதலை மறுப்பதாக சேரன் அறிவித்தார். ஆனால், சந்துருவுடன்தான் வாழ்வேன் என்று தாமினி பிடிவாதமாக இருந்தார். பின்னர் மனம் மாறிய தாமினி, சேரனுடன் செல்வதாகக்கூறி சென்றார். தனது மகள் விவகாரத்தில் சேரன் மிகவும் நொந்து போனார்.
இதில் கவனிக்கபட வேண்டிய விஷயம் என்னவென்றால் தாமணி காதலித்த நடன இயக்குனரான சந்துரு, சாண்டியின் நண்பர் என்றும் கூறப்படுகிறது. மேலும், சந்துருவின் காதலுக்கும் சாண்டி உதவியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் சாண்டி, சேரன் மீது இத்தனை காண்டாக இருக்கிறாரா என்ற எண்ணம் தோன்றுகிறது.