குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட அருண் விஜய்.! வனிதாவின் கமெண்டை பாருங்க.!

0
144295
Arun-vijay
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வனிதா இரண்டாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். வனிதா வெளியேறியது பலருக்கு சந்தோசம் தான் என்றாலும், அவர் நிகழ்ச்சியில் இல்லாமல் போனால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். அதுவும் கொஞ்சம் ஏற்புடையதாகவே இருந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் வனிதா. வனிதாவுக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆனது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இதையும் பாருங்க : விஜய் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்துள்ள சிறுத்தை சிவா.! எந்த படம் தெரியுமா.!

- Advertisement -

இரண்டு விவாகரத்திற்கு பின்னர் பிரபல சினிமா நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்தார் வனிதா. அதே போல கடந்த சில வருடங்களுக்கு முன்பே வனிதாவை அவரது குடும்பத்தினரே ஒதுக்கி வைத்து விடடனர்.

இந்த நிலையில் வனிதாவின் சகோதரரான நடிகர் அருண் விஜய் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சகோதரிகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை கண்ட பலரும் இந்த புகைப்படத்தை வனிதா எங்கே என்று கமன்ட் செய்து வந்தனர்.

-விளம்பரம்-

இதனால் இந்த புகைப்படத்திற்கு ரீ-ட்வீட் செய்துள்ள வனிதா, இந்த புகைப்படத்திற்கு கீழ் என்னை பற்றி கேட்ட அனைவருக்கும் நன்றி என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் அருண் விஜய் வேறு தாயின் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement