என்ன நடக்குது நாட்டுல, ஆளே இல்ல ரோட்டுல. சாண்டி வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு பாடல்.

0
6399
sandy
- Advertisement -

நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா தாக்கத்தினால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவினால் மக்களின் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. கொரோனாவை எதிர்த்து உலக நாடு முழுவதும் உள்ள அரசாங்கம், மருத்துவர்கள், காவல்துறை, நர்ஸுகள் என பல பேர் தங்கள் உயிரை பயணம் வைத்து போராடி வருகின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 4421 பேர் பாதிக்கப்பட்டும், 114 பேர் பலியாகியும் உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் போக்குவரத்து, கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. சினிமா முதல் சின்னத்திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் படபடிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டதால் பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்குகிறார்கள்.

இதையும் பாருங்க : விழிப்புணர்வு என்ற பெயரில் விஜய் பாடலில் வரும் மோசமான காட்சியை பதிவிட்ட கிரண். கடுப்பான விஜய் ரசிகர்கள்.

- Advertisement -

மேலும்,பல பிரபலங்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து தங்களால் முடிந்த வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். சாண்டி மாஸ்டர் எப்போதும் வித்தியாசமாக ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருப்பார். கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கூட சாண்டி மாஸ்டர் வித்தியாசம் வித்தியாசமாக பாடல்களை எழுதி பாடியிருந்தார். அதிலும் இந்த ‘வி ஆர் தி பாய்ஸ்’ பாடல் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

அந்த வகையில் தற்போது சாண்டி மாஸ்டர் கொரோனா வைரஸ் குறித்து பாடல் ஒன்றை எழுதி உள்ளார். இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி அவர்கள் கொரோனா வைரஸ் குறித்து நடன வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று முன் வெளியிட்டுள்ளார். இவர் அந்த வீடியோவில் தன் மகளுடன் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் அவர் தான் நடனம் ஆடிய முழு பாடலையும் 6 மணிக்கு சோசியல் மீடியாவில் வெளியிடுவதாகவும்கூறி இருந்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சற்று முன் வந்த ப்ரோமோ பாட்டே செம்ம மாஸாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர். சமீபத்தில் கூட விஜய் டிவி புகழ் செந்தில்– ராஜலட்சுமி அவர்கள் தங்களுடைய நாட்டுப்புற ஸ்டைலில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து பாடல் ஒன்றை பாடி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : கொரோனா நிவாரண நிதி, அள்ளிக்கொடுத்து ஒட்டு மொத்த தமிழ் நடிகர்களையும் மிஞ்சிய அஜித். எவ்வளவு தெரியுமா ?

சினிமா திரை உலகில் மிக பிரபலமான டான்ஸ் மாஸ்டர்களில் சாண்டியும் ஒருவர். இவர் சினிமா திரைப்படங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளில் நடன ஆசிரியராகவும், பல மேடை நடனங்களையும் தொகுத்து வழங்கி உள்ளார். சாண்டி அவர்கள் பிரபலமான நடன கலைஞர் கலா மாஸ்டரின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இதில் சாண்டி இரண்டாம் இடத்தையும் பெற்றார்.

Advertisement