லாலாவுடன் வெறித்தனம் பாடலுக்கு நடனமாடி சாண்டி வெளியிட்ட பாடல்.! செம டான்ஸ்.!

0
3192
Sandy
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கோலாகலமாக நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் முதல் பரிசை முகெனும் இரண்டாம் பரிசை சாண்டியும் வென்றார். சாண்டி பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அவருக்கு ஆதரவாக சாண்டி நடன பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் பல்வேறு விடீயோக்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாண்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வெறித்தனம் பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
https://twitter.com/CheckOutJohnny1/status/1181824956285382657

இந்த சீசனில் இரண்டாவது இறுதிப் போட்டியாளராக தேர்வான சாண்டியை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை கொண்டவராக இருந்தார் சாண்டி. பிக்பாஸ் ஆரம்பத்தின் முதலே தனது ஜாலியான குணத்தினால் மற்ற போட்டியாளரிடம் விரைவில் ராசியானார் சாண்டி. அதில் சாண்டிக்கு மிகவும் நெருக்கமானது கவின் தான். இந்த சீசன் ஆரம்பித்த நாள்முதல் கவினுக்கு இவர் பெரிதும் உறுதுணையாக இருந்தார். மேலும் இவரால் பிக்பாஸ் வீட்டில் வி ஆர் த பாய்ஸ் என்ற கேங்கும் துவங்கியது. மேலும், பிக் பாஸ் வீட்டில் பல்வேறு கானா பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

இதையும் பாருங்க : பிக் பாஸிற்கு பின் சாண்டியின் நடன பள்ளியில் செம குத்தாட்டம் போட்ட லாஸ்.! வைரலாகும் வீடியோ.!

- Advertisement -

இவரது கானா பாடல்களை கமல் அவர்களை பாராட்டியும் இருக்கிறார். குறிப்பாக ஒவ்வொரு போட்டியாளரும் செல்லும் முன்னரும் இவர் பாடும் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்பட்டது. இதுவரை பெரிய சர்ச்சையில் சிக்க வில்லை என்றாலும் ஒருகட்டத்தில் இவருக்கும் மதுமிதாவிற்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது தனது ஜாலி தன்மையிலிருந்து கொஞ்சம் சீரியஸ் மோடிற்க்கு வந்தார் சாண்டி. இருப்பினும் மதுமிதா எவ்வளவு தரைகுறைவாக பேசியும் அடுத்த சில நிமிடங்களிலேயே அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டார் சாண்டி, அதுதான் அவரது சிறந்த குணமாக கூட கருதப்படுகிறது. யாரிடமும் அவ்வளவாக குரலை உயர்த்தி பேசுவதில்லை மிகவும் நெருக்கமாக பழகி வந்த கவின் லாஸ்லியாவிற்காக சாண்டியை பலமுறை காயப்படுத்திய போதும் தானாக சென்று அவரிடம் பேசி இருந்தார் சாண்டி இவர் நட்பிற்கு கொடுக்கும் மரியாதையை கமல் கூட பாராட்டி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியின் மேடையில் கமல் கேட்டு கொண்டதற்காக சாண்டி வெறித்தனம் பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.

https://twitter.com/CheckOutJohnny1/status/1181825830890045440

மேலும், வெறித்தனம் பாடல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் உள்ளே இருக்கும் போது தான் வந்தது பின்னர் எப்படி இந்த பாடல் உங்களுக்கு தெரியும் என்று கமல் கேட்ட போது, இந்த பாடலை நாங்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது கேட்டிருக்கிறோம். முதல் முறை கேட்ட போதே இந்த பாடல் எங்களுக்கு பிடித்து போய்விட்டது என்று கூறி இருந்தார் சாண்டி. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வெளியே வந்த சாண்டி, தனது மாணவர்களுடன் சேர்ந்து பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள வெறித்தனம் பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுளளார். மேலும், அந்த வீடியோவில் அவரது ஆசை மகளான லாலாவும் நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement