நடந்து முடிந்தது இந்த நாமினேஷன் பிராசஸ்.! யார் யாரை நாமினேட் செய்தார்கள்.!

0
3314
Nomination

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவு கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்ஷ்ய் வெளியேற்றப்பட்ட சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேறினர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர்.

இன்று(ஆகஸ்ட் 19) வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் பிராசஸ் துவங்க இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் பதிவிக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஷெரீனை தலைவராக மற்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதையும் பாருங்க : விஜய் அஜித் கூட வேணுமாம் இந்த இளம் நடிகர் கூட தான் நடிக்கணுமாம்.! பகல் நிலவு நடிகை ஷிவானி.! 

- Advertisement -

எனவே, இந்த வாரம் ஷெரீனை யாரும் நாமினேட் செய்ய இயலாது. மேலும், இந்த வார நாமினேஷன் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும், எதிர்பார்த்ததை போல கஸ்தூரி இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார்.

இன்று நடந்து முடிந்த நாமினேஷனில் யார் ? யாரை நாமினேட் செய்த்தனர்.

வனிதா – சாண்டி மற்றும் தர்ஷன்
கஸ்தூரி – கவின் மற்றும் சாண்டி

கவின் – சேரன் மற்றும் கஸ்தூரி
முகென் – சேரன் மற்றும் கஸ்தூரி
சேரன் – சாண்டி மற்றும் தர்ஷன்
லாஸ்லியா – கஸ்தூரி மற்றும் சேரன்
ஷெரின் – முகென் மற்றும் கஸ்தூரி
தர்ஷன் – கஸ்தூரி மற்றும் சேரன்
சாண்டி – சேரன் மற்றும் கஸ்தூரி

-விளம்பரம்-

இறுதியாக நடந்து முடிந்த நாமினேஷன்படி தர்ஷன், சேரன், கஸ்தூரி மற்றும் சாண்டி ஆகியோர் இடம்பெற்றுள்னர்.

இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் இதுவரை எந்த வாரமும் நாமினேஷனில் இடம்பெறாத சாண்டி முதன் முறையாக இடம்பெற்றுள்ளார். அவர் எப்படியும் காப்பாற்றபட்டுவிடுவார் என்பது ஒரு புறம் இருந்தாலும். சாண்டி நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதால் மற்ற போட்டியாளர்களுக்கு வாக்குகளை போராடி தான் பெற வேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement