டி – ஷர்ட் அனுப்பியது குறித்து பேசிய சாண்டி மனைவி.! விஜய் டிவி செய்த சதியை பாருங்க.!

0
58617
sandy-Wife

பிக்பாஸ் வீட்டில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இரு குழுவாக போட்டியாளர்கள் பிரிந்துள்ளனர். அதில் சாண்டி, கவின், தர்ஷன், லாஸ்லியா ஆகிய ஐவரும் ஒரே அணியாக இருந்து வருகின்றனர். இதனால் ஷெரின் மற்றும் சேரன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் சேரன்.

Image

இதுபோக கடந்த சில நாட்களாகவே சாண்டி குரூப் எதை செய்தாலும் ஒன்றாகவே செய்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஒரே மாதிரி அச்சிடப்பட்ட டி-ஷர்ட் களையும் சாண்டி குரூப் அணிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பில் இருப்பதாக சேரன் பேசியிருந்தார்.

இதையும் பாருங்க : இளம் நடிகருடன் எடுத்துக்கொண்ட ஜிம் செல்பி.! வைரலாகும் பிரியா பவானி ஷங்கர் புகைப்படம்.!

- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் சாண்டி மற்றும் அவரது நண்பர்கள் ஒரு குழுவாக தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர் எனவும், அவர்கள் ஒரே மாதிரி வார்த்தைகள் அச்சிடப்பட்ட டி ஷர்ட்டை அணிந்து வருகிறார்கள் என்றும் கூறியிருந்தார். மேலும், ஷெரின் சாண்டி குருவுடன் எவ்வளவு வேகமாக இருந்தும் அவருக்கு அதேபோன்ற டீசட் கொடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், நேற்றைய நிகழ்ச்சி மூலம் தான் சாண்டி மற்றும் அவரது நண்பர்கள் அணியும் டிஷர்ட்டை சாண்டி மனைவி அனுப்பியுள்ளது தெரியவந்தது. இதனால் மனைவி ஏன் ஷெரீனுக்கு மட்டும் டி-ஷர்ட்டை அனுப்பவில்லை என்று சமூக வலைத்தளத்தில் பலர் சாண்டியின் மனைவியை டேக் செய்து கேள்வி கேட்டிருந்தனர். இந்த நிலையில் சாண்டியின் மனைவியிடம் ரசிகர் ஒருவர் உரையாடிய தனிப்பட்ட உரையாடலின் ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

அந்த உரையாடலில் சாண்டியின் மனைவியிடம் ஷெரீனுக்கும் ஒரு டி ஷர்ட் கொடுத்திருக்கலாமே என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள சாண்டியின் மனைவி நாங்கள் ஆறு டீ ஷர்டைதான் அனுப்பி இருந்தோம். ஆனால், ஒன்றை மட்டும் சேனல் ஏன் வழங்கவில்லை என்பது தான் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். எனவே , சாண்டியின் மனைவி ஷெரீனுக்கு டீ சர்ட்டை அனுப்பி உள்ளார். அதனை வேண்டுமென்றே பிக்பாஸ் ஷெரீனுக்கு கொடுக்காமல் இருக்கிறார் என்பது தெளிவாகவே தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement