முக்கிய வாரத்தில் நடத்தப்பட்ட தலைவர் போட்டிக்கான டாஸ்க்.! நாமினேஷனில் இருந்து தப்பியது யார் ?

0
10517
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் சேரன் வெளியேறி இருந்தது ரசிகர்கள் பலருக்கும் மிகப்பெரிய ஷாக்காக அமைந்தது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நல்ல அனுபவத்தை கொண்டு செல்வதாக சேரன் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் போட்டியாளர்களுக்கு சவாலான டாஸ்க்கும் வழங்கப்படவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில்கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே, அதாவது இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டாஸ்க் நடைபெற்றுவந்தது. மேலும், இந்த டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் முகென் அதிக புள்ளிகளை பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக சென்றுள்ளார்.

- Advertisement -

இன்று வெளியான இரண்டு ப்ரோமோவிலும் போட்டியாளர்களுக்கு தங்களது விருப்பமான போட்டியாளர்களை காப்பாற்ற டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் தர்ஷன் சாண்டி மற்றும் ஷேரினை காப்பாற்ற பச்சை மிளகாயை சாப்பிட்டார். அதே போல கவினை காப்பற்ற லாஸ்லியா பச்சை மிளகாயை சாப்பிட்டு இருந்திருந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவருக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முகென், கவின், சாண்டி ஆகிய மூவரையும் ஒரு பிளாஸ்டிக் பையில் முழுவதும் சுழட்டி பின்னர் அவர்கள் தரையில் தவழ்ந்து செல்கின்றனர். இதில் பந்தய கோட்டை சாண்டி முதலில் அடைந்தது போல தெரிகிறது. எனவே, இந்த வாரம் சாண்டி தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

Advertisement