இது நானா இல்ல விஜய் அங்கிளா – மகளை கொடுத்த ஓவியத்தை கலாய்த்த சஞ்சீவ். விஜய் மாதிரியா இருக்கு இது ?

0
702
sanjeev
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 92 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் வரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும்இருந்தனர். இதில் கடந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருந்த நிலையில் பிக் பாஸில் மிகவும் எதிர்பார்கப்படும் Ticket To Finale டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கில் வென்றால் நாமினேஷனில் இருந்து தப்பித்துவிடலாம் என்று ஒரு சிலரை தவிர மற்ற போட்டியாளர் மும்மரமாக போட்டியிட்டனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-19.jpg

இந்த டாஸ்கில் எப்படியாவது வென்றுவிடலாம் என்று மிகுந்த கனவோடு இருந்த நிரூப் முதல் நாளே வெளியேறி இருந்தது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது. நிரூப் வெளியேறியதை தொடர்ந்து இரண்டாம் டாஸ்க்கிலேயே பாவனியும் தாமரையும் வெளியேறினர். இதை தொடர்ந்து நடைபெற்ற டாஸ்கில் ராஜு, பிரியங்கா, சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய 5 பேர் மட்டும் இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்கை விளையாடினர்.

- Advertisement -

Ticket To Finaleவை மிஸ் செய்த சஞ்சீவ் :

இதில் பிரியங்கா, ராஜு வெளியேறினர். அதன் பின்னர் நடைபெற்ற இறுதி டாஸ்கில் சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய மூவர் மட்டும் விளையாடினர். இதில் சஞ்சீவ் வெளியேற சிபி மற்றும் அமீர் இறுதி கட்டத்திற்கு முன்னேறினர். இதில் வெற்றி பெரும் ஒருவர் Ticket To Finale வாய்ப்பை வென்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவார்கள் என்று இருந்த நிலையில் அமீர் இந்த Ticket To Finale டாஸ்கை வென்றார்.

வெளியேற்றத்திற்கு காரணம் என்ன :

இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் நிரூப், பாவனி, தாமரை, சிபி, பிரியங்கா ஆகியோர் காப்பாற்றப்பட்ட நிலையில் சஞ்சீவ் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த சஞ்சீவ், பாய்ண்ட் பாயிண்டாக பேசினாலும் நல்ல பெயர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மிகவும் Safe கேம் தான் விளையாடி கொண்டு வந்தார். அதுவே இவரது வெளியேற்றத்திற்கு காரணம்.

-விளம்பரம்-

இரண்டு படத்தில் ஹீரோவாக சஞ்சீவ் :

நேற்றய நிகழ்ச்சியில் பேசிய சஞ்சீவ், தான் பிக் பாஸ் வீட்டில் இருந்த போதே இரண்டு படத்தில் ஹீரோவாக கமிட் ஆகி இருப்பதாக இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் தன்னுடைய வீட்டிற்கு சென்றபோது அவர்களின் குடும்பத்தினர் அவருக்கு மிகுந்த வரவேற்பை கொடுத்தார்கள். மேலும் சஞ்சீவினி அக்கா சிந்து அவர்களின் மகள் மற்றும் அவரது கணவரும் சஞ்சீவ் வரவேற்றனர்.

மகளை கலாய்த்த சஞ்சீவ் :

மகள் வரைந்த ஓவியம்

மேலும், சஞ்சீவ்விற்கு அவரது மகள் அவரின் புகைப்படம் ஒன்றை வரைந்து அவருக்கு பரிசாக கொடுத்தார். அப்போது அதனை வாங்கிப் பார்த்து சஞ்சீவ் இது என்ன நானா இல்லை விஜய் ஆங்கிளா என்று கேலி செய்திருந்தார். அதற்கு சஞ்சீவ்வின் மகள் ‘உங்கள மாதிரி தான் இருக்கு’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement