பிக் பாஸிற்காக சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலை தவறவிட்டுள்ள சஞ்சீவ் – இப்போ அதில் யார் நடிக்கிறார் தெரியுமா ?

0
394
sanjeev
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இன்னும் சில நாட்களிலேயே டைட்டில் வின்னர் யார்? என்று தெரிந்து விடும். அதோடு வின்னர் பற்றி யூகிக்க முடியாத அளவிற்கு போட்டியாளர்கள் திறமையாக விளையாடி வருகிறார்கள். முதல்நாளில் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 14 பேர் வெளியேறி இன்னும் 6 பேர் மட்டுமே இருக்கின்றனர். இந்த சீசனில் இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்கள் கலந்துகொண்டனர் அதில் சஞ்சீவ்வும் ஒருவர். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறியவர் நடிகர் சஞ்சீவ்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-37.png

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி, பிக் பாஸ் நிகழ்ச்சியால் சஞ்சீவ் தவறவிட்ட சன் டிவி சீரியல் பற்றி கூறி இருக்கிறார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஆரம்பத்திலேயே என்னுடைய கணவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் யானை மற்றும் அன்பறிவு படங்களில் சஞ்சீவ் நடித்துக்கொண்டிருந்தார். அதனால் விருப்பம் இருந்தும் பிக்பாஸ் வாய்ப்பை அவரால் ஏற்க முடியவில்லை. என் கணவர் சின்னத்திரையில் வேலை செய்து ஒரு வருஷம் ஆகுது.

- Advertisement -

கணவர் குறித்து ப்ரீத்தி :

அதனால அந்த நிகழ்ச்சி மூலமாக மறுபடியும் அவருக்கு மக்கள் மத்தியில் ரீச் கிடைக்கும் என்று நினைத்து தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைத்தார். அதேபோல் 50வது நாட்கள் பிறகு வைல்ட்கார்ட் என்ரியாக பிக் பாஸ் வீட்டில் சஞ்சீவ் கலந்து கொண்டார்.என் கணவருக்காக மட்டும் இல்ல, நான் பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் பெரிய ரசிகை. முந்தைய சீசன்கள் எல்லாம் தவறாமல் பார்த்திருக்கிறேன். ஆனால், என் கணவர் இந்த நிகழ்ச்சியை அதிகம் பார்த்ததில்லை.

சஞ்சீவ் தவறவிட்ட சீரியல் :

அதனால் பிக்பாஸ் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி அவர் பழைய எபிசோடுகள் சிலவற்றை பார்த்தார். பின் நீங்கள் நீங்களாக இருங்கள், யார் கோபப்படுத்தினாலும் பொறுமையை இழக்காதீர்கள் என்று சொல்லி தான் அனுப்பினேன். அதேபோல் என் கணவரும் எப்போதும் இருக்கும் மாதிரி தான் அவரை வைத்துக் கொண்டிருந்தார். சன்டிவி வானத்தைப்போல சீரியலில் தமன் குமார் நடித்து வந்த கதாபாத்திரத்தில் முதலில் சஞ்சீவ் தான் நடிக்க இருந்தது.

-விளம்பரம்-

முதல் வாய்ப்பு கொடுத்த சன் டிவி :

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சஞ்சீவ் சென்றதால் அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீ நடிக்க சென்றார் என்று கூறி இருக்கிறார். நடிகர் சஞ்சீவ் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நடித்து வந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ சன் டிவியில் ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’ தான். இந்த தொடருக்கு பின்னர் இவர் செல்வம் என்று தான் குடும்ப ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர். அதே போல சஞ்சீவிற்கு முதன் முதலில் தொலைக்காட்சியில் வாய்ப்பு கொடுத்ததும் சன் டிவி தான்.

மெட்டி ஒலி சீரியலில் சஞ்சீவ் :

ஆம், சன் டிவியில் ஒளிபரப்பான 90ஸ் ரசிகர்களின் சூப்பர் ஹிட் சீரியலான ‘மெட்டி ஒலி’ தொடரில் ஒரு சிறிய வில்லன் ரோலின் மூலம் தான் சஞ்சீவ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். இதே தொடரில் தான் சஞ்சீவ்வின் அக்காவும் மறைந்த நடிகையுமான சிந்துவும் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சஞ்சீவ் இறுதியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கண்மணி’ தொடரில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement