சிந்துவை பிரிந்துவிட்டு அவர் இறந்த ஓராண்டிலேயே இரண்டாம் திருமணம் செய்த கணவர். இன்று அவரும் உயிருடன் இல்லை.

0
1136
sanjeev
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர்.

-விளம்பரம்-

சஞ்சீவ் கடந்து வந்த பாதை :

இதில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடக்கம். இதில் சஞ்சீவ் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், அவரது சகோதரி பற்றியும் அவரும் ஒரு நடிகை தான் என்பதை பற்றியும் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நேற்றய நிகச்சியில் அமீர் – சஞ்சீவ்விற்காக மீண்டும் கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

சஞ்சீவ் அக்கா சிந்து :

அப்போது தான் அக்கா சிந்துவின் மரணம் குறித்து சஞ்சீவ் பேசியது பலரை கண் கலங்க வைத்தது. தமிழில் இணைந்த கைகள் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இந்த படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பட்டிக்காட்டு தம்பி, பரம்பரை, சின்னத்தம்பி, கிரி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆஸ்துமா பிரச்சனை :

இவர் பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் தான் நடித்து இருந்தார். இவர் சினிமாவில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ரொம்ப நல்ல, தங்கமான மனிதர். இவர் 1995 ஆம் ஆண்டு ரகுவீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆஸ்துமா பிரச்சனை இருந்துள்ளது. இருந்தும் இவர் சினிமாவிலும் சின்னத்திரையிலும் நடித்து வந்து இருக்கிறார். மேலும், இதற்காக இவர் பல்வேறு விதமான சிகிச்சை பெற்று வந்தார்.

-விளம்பரம்-

சிந்துவின் இறப்பு :

இப்படி ஒரு நிலையில் தான் 2004 ஆம் வருடம் சுனாமி பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்காக நடிகை சிந்து ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டினார். அப்போது நீண்ட தூரம் நடந்ததால் இவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது. பின் கடந்த 2005 ஆம் ஆண்டு இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இருந்தும் சிகிச்சை பயனளிக்காமல் சிந்து இறந்தார்.

இரண்டாம் திருமணம் செய்த கணவர் :

சிந்து இறப்பதற்கு ஓராண்டிற்கு முன்னர் தான் அவருக்கு விவகாரத்தும் நடைபெற்று இருக்கிறது. சிந்துவின் கணவர் ரகுவீரும் ஒரு நடிகர் தான். இவர் பல கன்னட படங்களில் நடித்துள்ளார். மேலும், சிந்துவுடன் பல படங்களில் நடித்துள்ளார். சிந்துவை விவாகரத்து செய்த ஓராண்டிலேயே இவர் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement