அனைவரும் எதிர்பார்த்திருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார் என்று யூகிக்க முடியாத அளவிற்கு இந்த முறை பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சீசன்களை விட இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 க்கு வரவேற்பு குறைவு என்றும் கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறியவர் நடிகர் சஞ்சீவ். இப்படி ஒரு நிலையில் சஞ்சீவியின் மனைவியும் நடிகையுமான பிரீத்தி சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது,
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஆரம்பத்திலேயே என்னுடைய கணவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் யானை மற்றும் அன்பறிவு படங்களில் சஞ்சீவ் நடித்துக்கொண்டிருந்தார். அதனால் விருப்பம் இருந்தும் பிக்பாஸ் வாய்ப்பை அவரால் ஏற்க முடியவில்லை. என் கணவர் சின்னத்திரையில் வேலை செய்து ஒரு வருஷம் ஆகுது. அதனால அந்த நிகழ்ச்சி மூலமாக மறுபடியும் அவருக்கு மக்கள் மத்தியில் ரீச் கிடைக்கும் என்று நினைத்து தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைத்தார்.
பிக் பாஸ் வீட்டில் சஞ்சீவ்:
அதேபோல் 50வது நாட்கள் பிறகு வைல்ட்கார்ட் என்ரியாக பிக் பாஸ் வீட்டில் சஞ்சீவ் கலந்து கொண்டார்.
என் கணவருக்காக மட்டும் இல்ல, நான் பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் பெரிய ரசிகை. முந்தைய சீசன்கள் எல்லாம் தவறாமல் பார்த்திருக்கிறேன். ஆனால், என் கணவர் இந்த நிகழ்ச்சியை அதிகம் பார்த்ததில்லை. அதனால் பிக்பாஸ் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி அவர் பழைய எபிசோடுகள் சிலவற்றை பார்த்தார். பின் நீங்கள் நீங்களாக இருங்கள், யார் கோபப்படுத்தினாலும் பொறுமையை இழக்காதீர்கள் என்று சொல்லி தான் அனுப்பினேன்.
சஞ்சீவ் நடிக்க இருந்த சீரியல்:
அதேபோல் என் கணவரும் எப்போதும் இருக்கும் மாதிரி தான் அவரை வைத்துக் கொண்டிருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் என் கணவர் விளையாடும் போது அவரை எப்படி காட்டுவார்களே? என்ன நடக்குமோ? என்ற பதட்டத்தில் தான் நான் ஒவ்வொரு நாளும் காலையில் எழுவேன். அதேபோல சன்டிவி வானத்தைப்போல சீரியலில் தமன் குமார் நடித்து வந்த கதாபாத்திரத்தில் முதலில் சஞ்சீவ் தான் நடிக்க இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சஞ்சீவ் சென்றதால் அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீ நடிக்க சென்றார்.
பிக் பாஸ்ஸுக்கு பிறகு சஞ்சீவ்:
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது சஞ்சீவ் கதாநாயகனாக ஒரு படம் நடிக்கிறார். அதற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறி இருந்தார் ப்ரீத்தி. அதே போல சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது Ticket To Finale டாஸ்கில் சஞ்சீவ் தான் வெற்றி பெற்றார் என்றும். ஆனால், அமீருக்குப் பதிலாகத் திட்டமிட்டே சஞ்சீவ் வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து கமலிடம் சஞ்சீவ் பேசிய விஷயங்கள் டிவி-யில் ஒளிபரப்பப்படவில்லை’ என்னும் செய்திகள் சமூக வலைதளங்களில் ஒரு சர்ச்சை எழுந்தது.
சஞ்சீவ் தான் Ticket To Finale வென்றாரா :
இதுகுறித்து பேசியுள்ள ப்ரீத்தி,சனிக்கிழமை அவர் எலிமினேட் ஆனப்போ, அவரை நான்தான் பிக்கப் செஞ்சேன். அவரின் `பிக்பாஸ்’ அனுபவம் பத்தி ரெண்டு பேரும் விவாதிச்சோம். என்று கூறியுள்ள ப்ரீத்தி, அமீருக்கு Ticket To Finale டிக்கெட் கிடைத்தது குறித்து பேச மறுத்துவிட்டாராம். உண்மையில் சஞ்சீவ் Ticket To Finale வென்றாரா, அமீர் திட்டமிட்டு பைனலுக்கு அனுப்பப்பட்டாரா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.