விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது . பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஆவலாக உள்ளார்கள். கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எப்போதும் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்து கொண்டு தான் வந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள். பிக் பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது 100 நாட்கள்,சுற்றி கேமராக்கள், போட்டியாளர்கள் மற்றும் எந்த ஒரு தகவல் தொடர்போ,வெளியிலிருந்து நேர்முக நட்போ இல்லாமல் இருப்பது. மேலும், இந்த பிக்பாஸ் வீடு எப்போதும் சண்டைகள், பிரச்சினைகள், காதல், நட்பு என அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பல போட்டியாளர்கள் வெளியேறினாலும் சரவணன் மற்றும் மதுமிதாவின் வெளியேற்றம் தான் மிகவும் ரகசியமாக இன்னும் இருந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் விருந்தினர்களாக வந்திருந்தார்கள். பிக்பாஸ் வீட்டில் இருந்த அந்த 100 நாட்களையும் இந்த ஒரு வாரத்தில் நினைவுக்கு கொண்டு வந்தது என்று கூட சொல்லலாம். ஒரு சில போட்டியாளர்களை தவிர அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருந்தார்கள்.
இதையும் பாருங்க : உடன் நடித்தவர் யாருமே இல்லை.! கிருஷ்ணமூர்த்தியை நினைத்து மனம் வருந்திய வடிவேலு.!
மேலும் ,அந்த ஒரு சில பேர் வராததற்கு என்ன? காரணம் என ரசிகர்கள் இணையங்களில் கேள்விகளை கேட்டு வருகின்றனர். அப்படி ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து கேட்ட கேள்வி மதுமிதா,சரவணனை பற்றி தான். மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்கு வராதது அனைவருக்கும் தெரிந்த காரணம்தான். பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் தான் மிகவும் சர்ச்சையான முறையில் வெளியேற்ற பட்டார். ஒரு எபிசோடில் கமலிடம், சிறு வயதில் தானும் பேருந்தில் பெண்களை உரசி இருக்கிறேன் என்று கூறி இருந்தது பெரும் சர்ச்சையாக மாறியது. ஒரு தேசிய தொலைக்காட்சியில் பெண்கள் குறித்து சரவணன் எப்படி இவ்வாறு சொல்லலாம் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார் பிக் பாஸ். இருப்பினும் மன்னிப்பு கேட்ட பின் சிறிது நாட்கள் கழித்து சரவணனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வலுக்கட்டாயமான வெளியேற்றினார்கள். சரவணன் மன்னிப்பு கேட்டும் ஏன் அவரை வெளியிற்றினார்கள் என்று பலரும் கேள்விகளை கேட்க துவங்கினார்கள். மேலும், சரவணன் இறுதி போட்டிக்கு கூட வராதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நிலையில் பிக் பாஸ் இறுதி போட்டியில் கலந்து கொள்ளாதது ஏன் என்று சரவணன் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து தொலைபேசி பேட்டி ஒன்றில் பேசிய அவர், பைனலில் கலந்துகொள்ளாதது தனக்கு ஒரு விஷயமே இல்லை என்று தன்னுடைய குசும்புதனுடன் பதில் அளித்துள்ளார். மேலும், பிக் பாஸ் பற்றி பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். பைனல்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது எல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை தாண்டி என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் உள்ளன. தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் சரவணன், தற்போது தேனியில் மருத படத்தில் நடித்து வருகிறார். கிழக்கு சீமையிலே போன்று இது அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் சரவணன் அண்ணனாகவும், ராதிகா தங்கையாகவும்நடித்து வருகின்றனர். இந்த படத்தினை பாரதிராஜாவின் உதவியாளர் தான் இயக்குகிறார் என்றும் கூறியுள்ளார்.
இதை தவிர வித்தார்த் நடித்துள்ள ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற படத்திலும் நடித்துள்ளார் சரவணன். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் கழுகு சத்யசிவா இயக்கத்தில் பெல்பாட்டம் எனும் படத்தில் கிருஷ்ணாவுக்கு அப்பாவாகவும் நடித்து வருகிறார். இந்த படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சரவணன் என்னவானார் என்று ரசிகர்கள் கவலைபட்டு வந்த ரசிகர்களுக்கு தற்போது சரவணன் தொடர்ந்து படங்களில் நடித்து வருவது கொஞ்சம் நிம்மதியை ஏற்பட்டுள்ளது.