முதன் முறையாக தனது இரண்டு மனைவி மற்றும் மகனுடன் போஸ் கொடுத்த சரவணன். வைரலாகும் புகைப்படம்.

0
161057
saravanan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீஸனின் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சரவணனும் ஒருவர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வம்படியாக வெளியேற்றப்பட்டது தான் இந்த சீசனில் முதல் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is SARAVANAN-WIFE-1024x576.jpg
முதல் மனைவி

பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை சரவணன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதிலும், கல்லூரி படிக்கும் காலத்தில் பேருந்தில் பெண்களை உரசுவதற்காக நானும் சென்றுள்ளேன் என்று சரவணன் கூறி இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பல்வேறு பெண்கள் அமைப்பினரும் சரவணனை பிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப்ப வேண்டும் என்று கண்டித்ததோடு சரவணன் குறித்து பல்வேறு ட்வீட்களும், சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

இதையும் பாருங்க : மணிவண்ணன் மறைவால் அவரது மனைவிக்கு ஏற்பட்ட நிலை. இவங்களா இப்படி ஆகிட்டாங்க.

- Advertisement -

அதன் பின்னர் சரவணன் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருந்தார். இருப்பினும் அவர் மன்னிப்பு கேட்ட பின்னரும் பெண்களுக்கு எதிராக சர்ச்சையான கருத்தினை கூறிவிடீர்கள் என்று கூறி அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பினர். இது ஒருபுறம் இருக்க, பிக் பாஸ் வீட்டில் சரவணன் இருக்கும் போது ஒரு டாஸ்கில், தனது மனைவி மற்றும் மகன் குறித்து பேசி இருந்தார் சரவணன். அதில், முதல் மனைவி இருக்கும் போது வாரிசுக்காக, தன்னை ஆண்மகன் என்று நிரூபிப்பதற்காக 2ஆவது திருமணம் செய்து கொண்டு தன்னை ஆம்பளைன்னு நிரூபிச்சுட்டேன்னு மிகவும் நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்.

இரண்டு மனைவி மற்றும் மகனுடன் சரவணன்

சரவணன் பேசிய இந்த விஷயம் ஆணாதீகத்தை தூண்டும் விதமாக இருக்கிறது பல்வேறு பெண்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், பேட்டி ஒன்றில் பங்குபெற்ற சரவணனின் முதல் மனைவி சூர்யா பேசுகையில். நானும் சரவணனும் அடையார் பிலிம் நிறுவனத்தில் தான் ஒன்றாக சந்தித்தோம் எங்கள் திருமணம் காதல் திருமணம் தான். பெற்றோர்களின் பல எதிர்ப்புகளையும் மீறி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், எனக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறக்கவில்லை.

-விளம்பரம்-

இதனால் சென்னையில் உள்ள பல மருத்துவமனைகளில் பரிசோதனைக்கு சென்றேன். இறுதியாக என் கணவருக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதால் இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன். என் கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்ய எனது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அதை எல்லாம் மீறி இரண்டாம் திருமணத்தை செய்து வைத்தேன் அவரது திருமணத்துக்கான அனைத்து செலவுகளையும் நானே தான் செய்தேன் என்று கூறியிருந்தார்.

சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஒரு சமயத்தில் தனது இரன்டு மனைவியை ஒன்றாக விட்டு வந்துள்ளேன் என்பது தான் பயமாக இருக்கிறது என்று கிண்டலாக கூறி இருந்தார். ஆனால், இதுவரை சரவணன் இரண்டு மனைவிகளையும் ஒன்றாக யாரும் கண்டதும் இல்லை. இந்த நிலையில் சரவணன், தனது மகன் மற்றும் இரண்டு மனைவிகளிடம் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement