-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

மணிவண்ணன் மறைவால் அவரது மனைவிக்கு ஏற்பட்ட நிலை. இவங்களா இப்படி ஆகிட்டாங்க.

0
426236
Mannivannan-wife

தென்னிந்திய சினிமா திரை உலகில் உதவி இயக்குனராக அடி எடுத்து வைத்து பின் பல வெற்றிப்படங்களை இயக்கி வெற்றி கண்டது மட்டுமில்லாமல் ஒரு நடிகராகவும் புகழ் பெற்றவர் நடிகர் மணிவண்ணன். மணிவண்ணன் அவர்கள் சினிமா திரை உலகில் நடிகர், இயக்குனர் ஆக மட்டும் இல்லாமல் தமிழ் உணர்வாளர் ஆகவும் பங்காற்றியுள்ளார். இவர் தமிழில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகராக நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் 50 திரைப்படங்களை அவரே இயக்கியும் உள்ளார். மணிவண்ணன் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். அதோடு மணிவண்ணன் நடிகர் சத்யராஜின் கல்லூரி நண்பரும் ஆவார். அதனாலே மணிவண்ணன் சத்யராஜை வைத்து 25 படங்கள் எடுத்துள்ளார். பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்திற்கு பெரிதும் கவரப்பட்ட மணிவண்ணன் நூறு பக்கம் ரசிகர் மின்னஞ்சல் ஒன்றை பாரதிராஜாவுக்கு அனுப்பினார்.

-விளம்பரம்-
Image result for manivannan wife"

மணிவண்ணனின் ஆர்வமிக்க தாக்கத்தை பார்த்த பாரதிராஜா அவரை நேரில் சந்திக்க சென்னைக்கு வரச் சொன்னார். மேலும், மணிவண்ணன் 1979ல் பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கும் போது அவருடைய உதவியாளராக மணிவண்ணனை சேர்த்துக்கொண்டார். அதற்கு பிறகு ‘ நிழல்கள், டிக் டிக் டிக், காதல்ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, ஆகாய கங்கை,உள்ளிட்ட பல படங்களில் பாரதிராஜாவுடன் உதவி இயக்குனராகவும், கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்திருக்கிறார். அதற்கு பின்னர் இவர் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான முதல் படமாகும். இதனைத்தொடர்ந்து ‘இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, அமைதிப்படை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளவர். மேலும் இவர் பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’ என்ற படத்தின் மூலம் தான் வில்லனாக அறிமுகமானார்.

இதையும் பாருங்க : முன்னாள் மனைவி முன்னாள் இரண்டாம் மனைவியுடன் சாண்டி போட்ட ஆட்டம்.

அதற்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரம், நகைச்சுவைக் கதாபாத்திரம், வில்லன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில்தான் மணிவண்ணன் இயக்கிய சத்யராஜ் நடித்த அமைதிப்படை படத்தின் இரண்டாம் பாகம் நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ என்ற படம் வெளியாகி இருந்தது.சிறுவயதிலிருந்தே அரசியலில் அதிக ஈடுபாடு இருந்தவர் நடிகர். இதனைத்தொடர்ந்து மணிவண்ணன் சென்னையில் நெசப்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்திருந்தார். மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும் ,ரகுவண்ணன் மகனும்,ஜோதி என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் மணிவண்ணனுக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சையும், முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையும் செய்து உள்ளார்கள். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமலும், நடிக்காமலும் சினிமா துறையில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு ஓய்வுபெற்றார்.

Image result for manivannan wife"
-விளம்பரம்-

நடிகர் மணிவண்ணன்2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதுகு வலிப்பதாக கூறி இருந்தார். பின்னர் என்ன? நடந்தது என்று தெரியவில்லை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் போட்டு கீழே விழுந்து அநியாயமாக உயிரிழந்தார். மணிவண்ணன் மறைவுக்கு தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட தமிழ் திரை உலகமே சோகத்தில் மூழ்கியது. நடிகர் மணிவண்ணன் என்ற ஒரு மகத்தான அற்புதமான கலைஞனை சினிமா உலகம் இழந்துள்ளது என்று சொல்லலாம். நடிகர் மணிவண்ணனின் மனைவி செங்கமலத்தால் அவருடைய கணவர் மரணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

-விளம்பரம்-
Image result for manivannan wife"

அதோடு செங்கமலம் மணிவண்ணனுக்கு தாரமாக மட்டுமில்லாமல் தாயாகவும் இருந்தவர். மேலும், இவர் தன்னுடைய கணவனின் இறப்பினை குறித்து ஒவ்வொரு நாளும் அழுது அழுது புலம்பி இருந்துள்ளார். பின்னர் செங்கமலம் மணிவண்ணனை நினைத்து நினைத்து சரியாக சாப்பிடுவதும் இல்லை, தூங்குவதும் இல்லை புலம்பிக்கொண்டே இருப்பார். மேலும், மணிவண்ணன் இறந்து சரியாக இரண்டு மாதங்கள் கூட இருந்திருக்காது மணிவண்ணன் மனைவி செங்கமலம் தன்னுடைய உயிரிழந்தார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news