பிக் பாஸ் சீசன் 4- ன் தொகுப்பாளர் சிம்புவா ? அதிகராபூர்வ அறிவிப்பை வெளியிட்ட விஜய் டிவி.!

0
11227
simbu kamal
- Advertisement -

மற்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மூன்று சீசன்களை கடந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்களாக உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்கி வந்தார். மேலும், தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி தெலுகு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், இந்தி பிக் பாஸை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கானை அடுத்து மூன்று சீசனை தொடர்ந்து வழங்கி வருவது கமல் மட்டும் தான்.

இதையும் பாருங்க : காப்பான் – விமர்சனம்.!

- Advertisement -

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீனில் இருந்து கமல் வெளியேற்றப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அந்த சசனை சிம்பு தொகுத்து வழங்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

kamal-will-be-the-host-for-bigg-boss-season-4

இந்தச் செய்தி அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் தொலைக்காட்சி “அடுத்த சீசனுக்கு கமல் தான் தொகுப்பாளர். வேறு யாரிடமும் நாங்கள் பேசவில்லை. வேறு யாரையும் தொகுப்பாளராகக் கொண்டு வரும் எண்ணமுமில்லை” என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் தான் சிறந்த தொகுப்பாளர் என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement