காப்பான் – விமர்சனம்.!

0
3889
kapan
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகில் அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து கே.வி. ஆனந்த் உடன் கைகோர்த்து களமிறங்குகிறார் சூர்யா.இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள அடுத்த படம் “காப்பான்”.சில ஆண்டுகளாகவே சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் அந்த அளவிற்கு வெற்றி கொடுக்கவில்லை,எனினும் அந்த வகையில் இந்த காப்பான் படம் அமையுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் ராணி, சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் வெளியாகியுள்ளன.

-விளம்பரம்-
Image

கதைக்களம் :

- Advertisement -

சினித்துறையில் பல வெற்றி படங்களை கொடுத்த கே.வி. ஆனந்த் படம் என்றாலே ஒரு பெரிய டுவிஸ்ட் கொண்ட கதையாக தான் இருக்கும். அதாவது தன் கூடவே இருக்கும் ஒருவர் யாருக்கும் தெரியாத வகையில் முதுகில் குத்துவார் என்ற அளவிற்கு இவனா ?அவனா ?என்ற அளவிற்கு வில்லனை வைத்திருப்பா.ர் கேவி ஆனந்த் படத்தில் எப்போதுமே திரில்லர்,ஆக்ஷன் , கெமிஸ்ட்ரி, யாரும் எதிர்பார்க்காத விஷயங்களை கொண்டுவந்து நிரப்புவார். அந்த வகையில் இவர் இந்த காப்பான் படத்தில் ‘சிலிபிரா’ என்ற பூச்சி இனத்தை அனைவரும் பிரம்மிக்கும் வகையில் காட்டியுள்ளார். மேலும் இவர் விவசாய நிலங்கள் குறித்தும், விவசாயிகள் குறித்தும் பல கருத்துக்களை கொடுத்துள்ளார். மேலும், சில காலமாகவே தமிழகத்தில் நடந்து கொண்டு வரும் பிரச்சனைகளை எப்படி கதையில் கையாண்டுள்ளார் என்பதே சுவாரசியமான ட்விஸ்ட்.

இந்த படத்தில் நடிகர் மோகன்லால் அவர்கள் இந்தியாவின் பிரதமராக நடித்துள்ளார். படத்தினுடைய தொடக்கத்திலிருந்தே நாட்டின் பிரதமரை கொலை செய்யும் திட்டத்தோடு தொடங்கியது. அந்த நாச வேலைகளை சூர்யாதான் செய்கிறார் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு கதையை கொண்டு போனார் .திடீரென்று பார்த்தால் சூர்யா ஒரு ரகசிய உளவாளி ,அதாவது பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு உயர் அதிகாரியாக நடித்துள்ளார். சூர்யா பிரதமரை காப்பாற்றுவதுதான் கதாபாத்திரம் .ஆனால் எப்படி காப்பாற்றுகிறார்? என்பதுதான் கதை. அதை தொடர்ந்து, பிரதமரின் உயிருக்கு பல வகையில் ஆபத்துகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சூரியா பிரதமரை காப்பாற்றுகிறாரா ? பிரதமரை தாக்குவதற்கு என்ன காரணங்கள்? யார் இந்த நாச வேலைகளை செய்வது? என்பதுதான் படத்தின் மீதி கதை.இதில் நடிகர் மோகன்லால் பிரதமராக நடித்திருக்கும் கதாபாத்திரம் , அதேபோல் நாட்டின் பிரதமர் இருந்தால் எப்படி இருக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு நடித்துள்ளார். இதில் இந்தியா உணர்வு பற்றியும், நாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
kaappan

வழக்கம் போல் ஆர்யா பிளேபாய் ஆகவும், ஜாலியாகவும் இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும், போமன் ராணியிடம் அவர் அடிக்கும் சின்ன சின்ன கவுண்டர்கள் எல்லாம் மக்களை ரசிக்க வைத்தது. என்னதான் ஆக்சன் சீன்கள் வந்தாலும் காதல் வசனம் , பாடல்கள் இருந்தால்தானே படத்தை ரசிக்க முடியும் என்று மக்கள் குறை கூறாத வகையில் சாயிஷா போஷன் நடிப்பும் கேவி ஆனந்தின் கதை நுணுக்கமும் இருந்தது. இந்த படத்தில் வில்லனாக வித்யூத் ஜமால் நடித்துள்ளார்.வழக்கமாக வில்லன் என்றாலே பெரிய டயலாக்கை பேசுவது போல் இல்லாமல்,தன்னுடைய வில்லத்தனத்தை எல்லாம் பல நுணுக்கமான தொழில்நுட்பங்கள் மூலம் காட்டியுள்ளார்.

ப்ளஸ் :

அனைத்து காட்சிகளும் அதிரடியாகவும்,அறிவியல் சார்ந்த தொழில்நுட்பமான அளவிலும் காண்பித்துள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க அறிவியல் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பம் ஆகவும், விவசாய நிலத்தை பாதுகாக்கும் வகையிலும், புதுப்புது விஷயங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் எடுக்கப்பட்டதாகும்.

இந்தபடத்தில் தமிழ் மொழி பற்றி கூறும் வசனங்கள் அட்ராசிட்டி ஆகியிருந்தது.

படத்தின் ஸ்டண்ட் காட்சிகளும் குறிப்பாக ட்ரெயின் ஸ்டன்ட் காட்சிகள் சூப்பர் ஹிட் கொடுத்தது.

மோகன்தால் நம் நாட்டைப் பற்றி மட்டும் கவலைப்படாமல் பக்கத்து நாட்டின் மீதும் அக்கறையோடும், ஆதரவோடும் அமைந்த வசனங்கள் அருமையாக இருந்தது. ஒரு நாட்டின் பிரதமர் எப்படியெல்லாம் இருக்கலாம் என்று மக்கள் நினைக்கிறார்களோ அந்த அளவிற்கு இருந்தது.

Image

மைனஸ் :

பெண்களை வைத்து கிண்டல் அடிக்கும் கவுண்டர் இருந்திருக்க வேண்டாம்.

கதையில் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி இருக்க வேண்டாம்.

படத்தோட நேரத்தையும்,கதை நீளத்தையும் குறைத்திருக்கலாம்.

மேலும்,காமெடி சீன்கள் வைத்து இருக்கலாம்.

இறுதி அலசல்:

இந்த படத்தின் மூலம் நிறைய அறிவியல் அறிவியல் சார்ந்த தொழில் நுட்பங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும், விவசாய நிலங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வகையில் உருவாகிள்ளது.மொத்தத்தில் காப்பான் நாட்டை காப்பானாக!.

Advertisement