பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போது சென்ராயனிடம் அசிங்கப்பட்ட வைஷ்ணவி.!

0
308
vishnavi-bigg-boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வைஷ்னவி வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் எலிமினேஷன் கொஞ்சம் வித்யாசமாகவே நடைபெற்றது. இந்த வார நாமினேஷனில் டேனி,சென்ராயன்,ஜனனனி,ரித்விகா, வைஷ்ணவி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

vishnavi-bigg-boss

இதில் டேனி, ரித்விகா, ஜனனி ஆகியோர் இந்த வாரம் காப்பாற்றப்பட்டுவிட்டனர் என்று கமல் அறிவித்த பிறகு சென்ராயனை ஸ்டாரூமிற்கும், வைஷ்ணவியை கன்பஷன் ரூமிற்கும் அனுப்பி வைத்தார் கமல். யார் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற போகிறார் என்று போட்டியாளர்கள் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் சென்ராயன் பிக் பாஸ் வீட்டில் தங்கி விட்டார் என்று அறிந்ததும் போட்டியாளர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

பின்னர் சிறுது நேரம் கழித்து பிக் பாஸ் மேடையில் வைஷ்ணவியை கண்ட போட்டியாளர்கள் எந்த ஒரு ரீக்ஷனும் இல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தனர். வைஷ்ணவி வெளியேறியதை எண்ணி யாரும் வருத்தப்படவில்லை என்று தெளிவாக தெரிந்தது. பின்னர் போட்டியாளர்கள் ஒவ்வொருவரை பற்றி வைஷ்ணவி தனது கருத்தை தெரிவிக்கையில் சென்ராயனை பற்றி பேசும் போது ‘உங்களுக்கு காசென்ட்ரேஷன் சுத்தம்,நீங்க காதுல எதயும் வாங்கிக்க மாட்றீங்க ‘என்று கூறினார். இதனால் சற்று கடுப்பான சென்ராயன் ‘என்ன பத்தி இப்படி சொல்றயா, அப்போ நீ போய்ட்டு ‘ என்று கூறியதோடு ‘சார், சொன்ன மாதிரி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா முடிச்சிடு’ என்று கூறிவிடுகிறார்.

sendrayan

இருப்பினம் சென்ராயன் சொன்னதை ஏற்றுக்கொள்ளாத வைஷ்ணவி, ‘நான் எப்படியும் கலம்ப போற, அதுனால நான் சொல்லிட்டு தா போவேன்’ என்று கூறிவிட்டு வழக்கம் போல லொடலொடவென்று பேச ஆரம்பித்துவிடுகிறார். வைஷ்ணவி எப்போதும் பிறரடம் அதிகம் பேசிக்கொண்டே இருப்பார் என்பது தெரியும். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியைவிட்டு போகும் போது கூட சென்ராயனை சற்று குறைத்து மதிப்பிட்டு குறை கூறியதால், சென்ராயன், வைஷ்ணவி போனால் போதும் என்ற அளவிற்கு கடுப்பாகி விட்டார்.