தனது இரண்டு மாத மகனுடன் சென்ராயன் கொடுத்த போஸ்.! இதுவரை வெளிவராத புகைப்படம்.!

0
558
Senrayan

நடிகர் சென்ராயன், தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார்.

This image has an empty alt attribute; its file name is Senrayan-1024x768.jpg

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சென்ராயன், அதன் பின்னர் ஆடுகளம், சிலம்பாட்டம், மூடர் கூடம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சினிமாவை விட அதிகம் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இதையும் பாருங்க : ஹீரோ வாய்ப்பு.! வீட்டிற்கு அழைத்த விஜய்.! பல விஷயங்களை பகிர்ந்த சாமி நாதன்.! 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது தனக்கு குழந்தை இல்லை அதனால் அனாதை குழந்தைகளை தத்தெடுக்க போவதாக கூறியிருந்தார் சென்றாயன். அதன் பின்னர் கமலும் கண்டிப்பாக அடுத்த  வருடத்திற்குள் உங்கள் மனைவிக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியிருந்தார். பின்னர் கமல் கூறிய வாக்கு பலித்தது போலவே சென்றாயன் மனைவி கருவுற்றார். 

சென்ராயன் மனைவிக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார் சென்ராயன். இந்த நிலையில் தனது இரண்டு மாத குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.