அம்மன் பாவம் “டி”..! ஜூலியை Phone செய்து அசிங்கப்படுத்திய சக்தி.!

0
380

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கட்டிபிடி வைத்தியர் என்ற பெயரை எடுத்தவர் கவிஞர் சினேகன். பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை ஆண், பெண் என்று பாரபட்சம் பார்க்காமல் அனைவரிடமும் கட்டி பிடி வைத்தியம் மூலம் தனது அன்பை வெளிப்படுத்தினர்.

Sakthi

ஒரு சிலர் அவர் அன்பின் வெளிப்பட்டால் தான் அனைவரையும் கட்டிப்பிடிக்கிறார் என்று கூறினாலும், ஒரு சிலர் சினேகனை பல பேர் பிளே பாய் என்று சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வந்தனர். சமீபத்தில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த சினேகன், ஐஸ்வர்யாவை தூக்கி டூயட் பாடியதும், விஜயலட்சுமியை பலூன் டாஸ்கின் போது தூக்கிக்கொண்டு ஓடியதும் சமூக வலைத்தளத்தில் பலரும் கிண்டல் செய்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகரும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சக்தியிடம், சினேகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது அப்போது பேசிய சக்தி, விஜலட்சுமியை, சினேகன் ஒரு டாஸ்கில் தூக்கிய புகைப்படத்தை போட்டு i am back என்று சமூக வலைதளத்தில் சிலர் மீம் போட்டிருந்ததை நான் பார்த்தேன்.

Amman

ஆனால், அதனை பார்க்கும் போது சினேகன் வெளியே வந்தால் கேட்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அவர் வெளியே வந்தால் நான் கண்டிப்பாக கேட்பேன் ‘ஏன் அண்ணா அடங்க மாடீர்களாக’ என்று. ஆனால், நான் கேட்டால் அவர் கண்டிப்பாக ‘டாக்ஸ்னு வந்துட்டா 100 சதவீதம் நாம செஞ்சி தான ஆகணும் சக்தினு’ கண்டிப்பா சொல்லுவாரு. அவருக்கு வெளிய வந்ததும் கல்யாணம் பண்ணி வைக்கணும். இல்லைனா அவர் பார்ட் 3 க்கும் போடுவாரு என்று கிண்டலடித்துள்ளார் சக்தி.

Aishwarya

அதே போல ஜூலி நடித்து வரும் அம்மன் தாயி படத்தை குறித்து கேட்கப்பட்டபோது, அந்த போஸ்ட்டரை பார்த்துவிட்டு ஜூலிக்கு போன் பண்ணி அம்மன் பாவம்டி என்று ஜூலியிடமே சொன்னேன். அதே போல இன்னும் அவள் அனிதா, உத்தமி என்ற படங்களில் நடித்து வருகிறார், அதற்காக அவளிடம், எவ்வளவோ கோவம் வரவழைக்கமுடியுமோ அவ்வளவு கோவம் வரவைக்கிற என்று சொன்னேன்.அதறகு என்று ‘இனி கோச்சிக்கிட்ட என்ன கோச்சிக்காட்டி என்னண்ணே ‘னு சொல்லிட்டாள், நான் என்ன பண்றது என்று சிரித்தபடியே கூறியுள்ளார் சக்தி.