ஷாரிக் தனது தலைவர் பட்டத்தை யாஷிகாவிற்கு ஏன் கொடுத்தார் தெரியுமா ?

0
1078
Yashika-And-Shariq

கடந்த 6 வாரங்களாக நாமினேஷனிற்கு வராத ஷாரிக், 7வது வாரம் முதல் முறையாக நாமினேஷன் செய்யப்படுகிறார். அதே வாரம் சிறந்த போட்டியாளராக தேர்வும் செய்யப்படுகிறார். அதோடு ரித்விகாவுடன் நடந்த தலைவர் போட்டியில் வென்று தலைவர் பதவியையும் முதல் முறையாக கைப்பற்றுகிறார். அதே வாரம் அவர் வீட்டில் இருந்தும் வெளியேற்றப்படுகிறார்.

sharik

- Advertisement -

இந்த 7வது வாரம் ஷாரிக் அவர்களுக்கு மிக முக்கியமான வாரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்துவிட்டது. அதோடு அவர் வைத்திருக்கும் தலைவர் பட்டத்தை வேறு ஒரு போட்டியாளருக்கு வழங்கவேண்டும் என்ற சூழ்நிலையில் அவர் அதை யாஷிகாவிற்கு கொடுத்துவிடுகிறார்.

அவர் வளர்ந்திருந்த செடியை அவர் சார்பாக வளர்க்க ஐஸ்வர்யாவை தேர்ந்தெடுத்து அவரிடம் ஒப்படைத்துவிட்டார். ஆனால் மிக முக்கிய தலைவர் பதவியை யாஷிகாவிரிக்கு கொடுக்க காரணம் என்னவாக இருக்கும் ? தலைவர் பதிவிற்கு உள்ள முக்கிய சிறப்பு அந்த நபரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியிற்றே நடக்கும் நாமினேஷனில் நாமினேட் செய்யமுடியாது.

-விளம்பரம்-

Aishwarya-Yashika

  1. கடந்த வாரம் தான் ஐஸ்வர்யா தலைவர் பதவி வகித்தார். அதோடு இந்த வாரம் அவரை நாமினேஷனில் இருந்து பிக் பாஸ் காப்பாற்றிவிட்டார். அதனால் அவருக்கு இந்த பதவி பெரிதும் தேவைப்படாது.
  2. ஷாரிக் அவர்களின் மிக முக்கிய நெருங்கிய நண்பர் மஹத், ஆனால் அவர் ஏற்கனவே ஒருமுறை கேப்டன் பதவி வகித்ததால் அவருக்கு இந்த பதிவியை தராமல்இருந்திருப்பார் போலும்.
  3. யாஷிகா, அவருக்கு நெருங்கிய நண்பர் மற்றும் சகோதரி மாதிரி என்று கமலிடம் மேடையில் ஷாரிக் குறிப்பிட்டிருப்பார். அதோடு யாஷிகா இதுவரை தலைவர் பதவி வகித்ததில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த வாரம் அவரை வெளியேற்றத்திலிருந்து காப்பாற்ற சிறந்த வழி இதுமட்டுமே. அதனால் அவருக்கு தலைவர் பதவியை ஷாரிக் வழங்கினார் போலும்.

யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் நாமினேஷனில் இருந்து தப்பித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement