டான்ஸிங் சூப்பர் ஸ்டாரில் இந்த வாரம் வர இருக்கும் புதிய நடுவர் இந்த பிக் பாஸ் பிரபலம் தான்.

0
17335
dancing

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் எல்லா சேனலிலும் வித்தியாசமான கதை களம் கொண்ட தொடர்களையும், புது புது நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் மிகப் பிரபலமான சேனல் என்று சொன்னால் விஜய் டெலிவிஷனை சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் மற்ற சேனல்களில் எல்லாம் விஜய் டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை பெயரை மாற்றி ஒளிபரப்பும் செய்கிறார்கள். அந்த அளவிற்கு விஜய் டெலிவிஷன் மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது.

மேலும், விஜய் டெலிவிஷனில் தொடர்கள் மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பப்பட்டு வேற லெவல்ல தெறிக்க விடுகிறார்கள். உதாரணத்திற்கு ஜோடி நம்பர்-1, கலக்கபோவதுயாரு தொடங்கி தற்போது இருக்கும் பிக் பாஸ் வரை சொல்லலாம். இப்படி நல்ல விமர்சனங்களை வாங்கி உள்ளது விஜய் டெலிவிஷன். ஆனால், இப்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் மூலம் வாங்கிய மொத்த பெயரும் போய்விடும் போல் உள்ளது. இந்நிலையில் இந்த விஜய் சேனலில் “டான்சிங் சூப்பர் ஸ்டார்” என்ற ஒரு டான்ஸ் ஷோ புதுசாக அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இதையும் பாருங்க : அரை ட்ரையர், முண்டா பனியன். முண்டாசுப்பட்டி பட நடிகையின் போஸை பாருங்க.

- Advertisement -

இதற்கு முன்னரே விஜய் டெலிவிஷனில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஜோடி நம்பர் 1, கிங்ஸ் ஆப் டான்ஸ் என பல நடன நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது என்றும் சொல்லலாம். இந்த டான்ஸ் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் சாண்டி, ஆலியா மானசா, டிடி என்கிற திவ்யதர்ஷினி, சுனிதா,மகத் என 5 பேரும் ஜட்ஜாக இருந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வாரம் டான்சிங் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் புதிய நடுவர் வர இருக்கிறார் என்று சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி ட்வீட் செய்து இருந்து அந்த நடுவர் யார் என்பதை கண்டு பிடிக்க கூறி இருந்தது. அது வேறு யாரும் இல்லை பிரபல நடிகையும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளருமான ஷெரின் தான் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகிறார்கள். மேலும் விஜய் டிவி செய்த டீவிட்டிலும் ரசிகர்கள் கமன்ட் செய்த ஷெரினின் புகைப்படத்திலும் ஷெரின் அதே புடவையை தான் கட்டியுள்ளார். எனவே,ஷெரின் தான் இந்த வாரம் சிறப்பு நடுவராக வரவிருக்கிறார் என்பது ஓரளவு உறுதியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement