பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு காதல் கதைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தர்ஷன், ஷெரின் ரொமான்ஸ்சும் ஒன்று. தர்ஷனுக்கு வெளியில் காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் ஷெரின்,, தர்ஷனிடம் நெருக்கமாக பழகி வருவதை ஒருசில போட்டியாளர்கள் காதலாக வர்ணித்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், இவர்கள் இருவரையும் வைத்து போட்டியாளர்கள் கலாய்த்து வந்தனர் . இருப்பினும் இவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருவதாக தான் கூறி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷெரின் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு கடிதத்தை எழுதலாம் என்றும் அந்த கடிதம் ஒளிபரப்ப படாது என்றும் சிறப்பு விருந்தினராக சென்றிருந்த மஹத் மற்றும் யாஷிகா அறிவித்தனர். இதனால் ஷெரின் மறைத்து மறைத்து கடிதத்தை எழுதினார் .
இதையும் பாருங்க : இறுதி வாரத்தில் யாருக்கு எவ்வளவு வாக்குகள் விழுந்தது தெரியுமா.! வெளியான தகவல்.!
அதன் பின்னர் அந்த கடிதத்தில் இருப்பதை அனைவர் முன்பும் படிக்க வேண்டும் என்று கூறியதால் அந்த கடிதத்தை கிழித்து குப்பை தொட்டியில் போட்டார் ஷெரின். இருப்பினும் குப்பை தொட்டியில் கிளறி கிழிக்கபட்டிருந்த துண்டுகளை ஒட்டி அந்த கடித்தை படித்தார் தர்ஷன்.
இந்த நிலையில் இன்று இணையத்தில் லீக் ஆகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் கமல், ஷெரின் கிழித்து போட்ட கடிதம் குறித்து கேட்டுள்ளார். மேலும், தர்ஷனிடம் இது குறித்து கமல் கேட்ட போது, அதில் என்ன இருந்தது என்று தர்ஷன் மழுப்பலாக பதில் கூறியுள்ளார்.