பிக் பாஸிற்கு பின் பேச்சு வார்த்தையை நிறுத்தி விட்டோம்.. காரணத்தை சொன்ன ஷெரின்..

0
16931
tharshan sherin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகவும் கோலாகலமாக நிறைவடைந்த இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு நடிகர் நடிகைகள் பங்கேற்றனர். அதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான நடிகை ஷெரின் இந்த சீசனில் கலந்துகொண்டிருந்தார். துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த ஷெரின் அதன்பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்துள்ளார் ஷெரின்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு காதல் கதை ஓடியது, அதில் முதலில் ஆரம்பித்தது அபிராமி மற்றும் கவின் ரொமான்ஸ் தான் அதன் பின்னர் அபிராமி -முகேன், சாக்க்ஷி – கவின், லாஸ்லியா – கவின் என்று பல்வேறு காதல் கதைகள் மாறி மாறி ஓடி வந்தாலும் ஒருபுறம் தர்ஷன் மற்றும் ஷெரின் காதல் கதையும் ஓடத்துவங்கியது. ஆரம்பத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தாலும் மற்றவர்கள் கண்ணுக்கு இவர்கள் இருவரும் காதலிப்பது போலத்தான் தெரிந்தது. அதனை நிரூபிக்கும் விதமாக தர்ஷனுக்கு ரகசியமாக கடிதம் எழுதி இருந்தார் ஷெரீன். ஆனால், அதனை மற்றவர்கள் படித்து காண்பிக்க வேண்டும் என்று கூறியவுடன் அதனை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார். பின்னர் அந்த கடிதத்தை ஓட்ட வைத்து படித்தார் தர்ஷன்.

இதையும் பாருங்க : அவங்க தான் காரணம்.. முகென் மற்றும் தர்ஷன் இருவர் குறித்தும் புதிய சர்ச்சையை கிளப்பிய மீரா..

- Advertisement -

அந்தத் தருணத்தில்தான் ஷெரின் மற்றும் தர்ஷன் எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்று ஒரு விஷயம் ரசிகர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் தெரியவந்தது. ஆனால், தர்ஷனுக்கு ஏற்கனவே சனம் ஷெட்டி என்ற காதலி இருக்கிறார் என்று வனிதா பத்த வைத்து விட்டார். இதனால் ஷெரீனுக்கு சண்டை கூட ஏற்பட்டது. ஆனால், தர்ஷன் இதுவரை சனம் ஷெட்டியை காதலிக்கிறார் என்று சொன்னதும் இல்லை. அதேபோல தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போது கூட தர்ஷனுக்கு மிகவும் ரகசியமாக கடிதம் ஒன்றை எழுதி அவரது பெட்டியில் வைத்து அனுப்பியிருந்தார் ஷெரின். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள ஷெரின் தர்ஷன் குறித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தனக்கும் தர்ஷனுக்கும் உண்டான உறவு குறித்தும் பேசியுள்ளார்

sherin

அந்த பேட்டியில் பேசியுள்ள ஷெரின் பிக் பாஸ் வீட்டில் தர்ஷனுக்கு நான் எழுதிய கடிதத்தை தர்ஷன் படித்துவிட்டான். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அதற்கு பதில் கூறுவதாகவும் கூறி இருந்தான். ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தர்ஷனிடம் நான் பேச முயலவில்லை. அதே போல அவனும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அவருடைய தனிப்பட்ட வாழ்வில் நான் எந்த பிரச்சனையையும் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். அதனால் தான் நான் அவனை இன்னும் தொடர்புகொள்ளவில்லை என்று கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் கூட ஷெரின், தர்ஷனை பின் தொடர்வதை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement