அவங்க தான் காரணம்.. முகென் மற்றும் தர்ஷன் இருவர் குறித்தும் புதிய சர்ச்சையை கிளப்பிய மீரா..

0
9867
mugen-tharshan-meera

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக அறியப்பட்ட மீரா மிதுன், இப்போது தனது சக போட்டியாளர்களான அபிராமி வெங்கடச்சலம் மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோரை குற்றம் சாட்டி தொடர்ச்சியான ட்வீட்களைக் பதிவிட்டு வருகிறார்வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை தமிழில் நீங்கள் அறிந்திருந்தால், இந்த நிகழ்ச்சியில் மிகவும் சர்ச்சைக்குரிய பங்கேற்பாளர்களில் ஒருவரான மீரா மிதுனைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

https://twitter.com/meera_mitun/status/1181848992734253058

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள் அந்த வகையில் மீராமிதுன் சர்ச்சை ஒன்றும் குறைவான ஆள் கிடையாது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே மீராமிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் மேலும் சூப்பர் மாடல் என்ற பெயரில் பல்வேறு பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது ஜோ மைக்கல் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இப்படிப்பட்ட சர்ச்சையான ஒரு நேரத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளிலிருந்தே இவரை அபிராமி மற்றும் சாக்ஸி டார்கெட் செய்து தொடர்ந்து சண்டையிட்டு வந்தனர்.

இதையும் பாருங்க : நம்ம வீட்டு பிள்ளை படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் இருந்தும் நீக்கப்பட்ட மீரா..

- Advertisement -

முதலில் ரசிகர்களுக்கு சாக்க்ஷி மற்றும் அபிராமி மீது தான் கொஞ்சம் வெறுப்பு ஏற்பட்டது. ஆனால் போகப் போகத்தான் மீராமிதுன் உண்மையான சாயம் வெளுக்கத் தொடங்கியது. இதனால் அபிராமி மற்றும் சாக்க்ஷி செய்தது சரி தான் என்று ரசிகர்கள் பின்னர் உணர்ந்தனர்.இந்த நிலையில் சாக்க்ஷி மற்றும் அபிராமி குறித்து பல்வேறு ட்வீட்களை பதிவிட்டு வருகிறார் மீரா. அந்த ட்வீட்களில், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு தனக்குத் தெரிந்த அபிராமி மற்றும் சாக்ஷி காரணமாக தான் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன் என்று மீரா கூறியுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1181849646852788224

இதுநாள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்து பல்வேறு நபர்கள் மீது குற்றம் சாட்டி வந்த மீரா தற்போது முகன் மற்றும் தர்ஷன் தன்னை காயப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மீரா : “பிக்பாஸ் வீட்டில் சாண்டியை தவிர அனைவருமே எனக்கு எதிராக தான் இருந்தார்கள்மேலும், என் மீது மிகவும் பொறாமைப்பட்டார்கள், எல்லா நேரமும் என்னை அவமானப்படுத்துவதும் தனிமைப்படுத்துவதுவுமாக இருந்தார்கள். அது என்னை ஒருபோதும் பாதிக்கவில்லை. முகென் மற்றும் தர்ஷன் இரண்டு ஊமை மனிதர்கள் என்னை காயப்படுத்தத் தொடங்கினர், அவர்கள் வீட்டில் உள்ள அனைவராலும் கையாளப்படுகிறார்கள். பிக் பாஸ் இறுதிப் போட்டிக்குப் பிறகு கூட அனைவரும் சந்தித்த போது கூட, பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு ஆண்களும் என்னுடன் நிற்பதற்குப் பதிலாகஎன்னை துன்புறுத்தினர் என்று பதிவிட்டுள்ளார் மீரா.

-விளம்பரம்-
https://twitter.com/meera_mitun/status/1181849922615697408

இறுதி நாளில் அளிக்கப்பட்ட விருந்தில் விஜயகுமார் மட்டுமே கடைசியில் தன்னை ஆறுதல்படுத்தியதாகவும், தனது ட்வீட் மூலம் நன்றி தெரிவித்ததாகவும் அவர் கூறினார். மேலும், அடுத்த ட்வீட்டில், மீரா மிதுன், சாக்ஷியும் அபிராமியும் ஜோ மைக்கேலுடன் சேர்ந்து தனது நற்பெயரைக் கெடுத்ததாகக் கூறினார். பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எந்த நண்பர்களும் இருக்கக்கூடாது என்று அவர்கள் இருவரும் விரும்புவதாக கூறியுள்ளார் மீரா மிதுன். மற்றுமொரு டீவீட்டில், சாக்க்ஷி மற்றும் ஜோ மைக்கல் இருவரும் இனைந்து தனது தொலைபேசி என்னை பல்வேறு குழுவில் போட்டு விட்டதாகவும் இதனால் தான் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள மீரா, தனது எண்ணை மாற்றினால், அதில் தேசிய மற்றும் சர்வதேச தொடர்புகள் இருப்பதால் எனக்கு பெரிய இழப்பு ஏற்படும் என்று மீரா மிதுன் பதிவிட்டுள்ளார்.

Advertisement