தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் ஷெரீனுக்கு ஏற்பட்ட பிரச்சனை – அவரே பதிவிட்ட பதிவு.

0
4488
sherin
- Advertisement -

நாடு முழுதும் கடந்த ஓராண்டிற்கு மேலாக கொரோனா தொற்றால் பலர் இறந்து வருகின்றனர். பொது மக்களை போல தமிழ் திரையுலகிலும் பல்வேறு பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து குணமாகினர். ஆனால், பல்வேறு பிரபலங்கள் இந்த தொற்றில் இருந்து மீள முடியாமல் காலமாகிய சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. பின்னணி பாடகர் எஸ்பிபி, இயக்குனர் தாமிரா, இயக்குநர் கே. வி ஆனந்த், காமெடி நடிகர் பாண்டு, நடிகர் மாறன், ஜோக்கர் துளசி, ஆட்டோகிராப் கோமகன், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்து உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

-விளம்பரம்-

அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் கொரோனாவால் பலர் பாதிக்கப்ட்டனர். சமீபத்தில் கூட ஆஜீத், கேபி, சென்றாயன், அஸ்வின் என்று பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதையும் பாருங்க : இதனால் தான் அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க முயற்சிக்கல – தந்தையின் விவாகரத்து குறித்து ஸ்ருதி ஹாசன்.

- Advertisement -

கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது தான் சிறந்த வழி என்று அரசும் சுகாதார துறையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. அதே போல மக்களுக்கு தடுப்பூசி பற்றிய அச்சத்தை போக்கவும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களைப் பகிர்ந்து, தங்கள் ரசிகர்களையும் சமூக ஊடகப் பின்தொடர்பவர்களையும் தடுப்பூசி போட ஊக்குவித்து வருகிறார்கள்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சிலருக்கு ஒரு சில மாற்றங்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகை ஷெரீனுக்கு, சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உடல்நிலை சரியில்லை, 102 அளவு காய்ச்சல் அடிக்கிறது. தாங்க முடியாத உடல்வலி, தலைவலி மிகவும் சோர்வாக இருக்கிறது. அப்படி என்றால் தடுப்பூசி வேலை செய்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement