இதனால் தான் அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க முயற்சிக்கல – தந்தையின் விவாகரத்து குறித்து ஸ்ருதி ஹாசன்.

0
8715
sruthi
- Advertisement -

சுருதி ஹாசன் அவர்கள் சினிமா திரை உலகில் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி கொண்டு வருகிறார். இவர் தமிழ் சினிமா திரை உலகில் பிரபலமான நடிகர் கமலஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார். சினிமாத் திரையில் சூரிய அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.பின் பூஜை, புலி, வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். பின்னர் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் சினிமா துறையில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்துக் கொண்டார் என்றும் சொல்லலாம்.

-விளம்பரம்-
Image result for shruthi haasan mother"

தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்கள் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் மைக்கேல் என்பவரை காதலித்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். பின்னர் இவர்கள் இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டது. ஆனால்,நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்கள் அதை எல்லாம் நினைத்து அழுது, புலம்பி இருக்காமல் இவர் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்து விட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. மற்றவர்களை போல் இல்லாமல் ஸ்ருதி நிஜமாகவே தைரியமான பெண். இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை பற்றியும், தன்னுடைய பெற்றோர் பற்றியும் சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியது, பெற்றோர்கள் ஒன்றாக இருந்தாலும் வலி தான். வலி என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று அவர்கள் இருவரும் சண்டை போடும் பேசாமல் இருப்பது என பல வாழ்க்கையின் ஒரு பாகம்.

இதையும் பாருங்க : தன்னுடைய வீடியோவை பிளாக் செய்த பாகிஸ்தான் அரசு – மியா கலீபா கொடுத்த பதிலடிய பாருங்க.

- Advertisement -

அதாவது அனைவருடைய வாழ்க்கையில் ஒரு பாகம் என்று சொன்னால் அது பெற்றோர்கள் தான். எப்பவுமே அம்மா, அப்பா பிரிந்தது மற்றவர்களுக்கு வேணாம் அது செய்தியாக இருக்கலாம். ஆனால், வீட்டில் இருக்கிறவர்களுக்கு அப்படி இருக்காது. ரொம்ப வேதனைக்கு உரிய விஷயம். என்னுடைய விஷயத்தில் பொறுத்த வரைக்கும் என்னுடைய அப்பா, அம்மா பிரிந்தது எனக்கு மகிழ்ச்சியான விஷயம் தான். ஏனென்றால் ரெண்டு பேருமே அருமையான நடிகர்கள். இருவரும் ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுக் கொண்டும், மனஸ்தாபம் ஏற்படுத்திக் கொண்டும் இருப்பதை விட இரண்டு பேரும் பரஸ்பரமாக புரிந்து கொண்டு பிரிந்து அவர் அவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதே நல்ல விஷயம்.

Image result for shruthi haasan mother"

ஆனால், ரெண்டு பேரும் பிரிந்தது எனக்கு கஷ்டமாக இருந்தாலும் அவர்கள் ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தது பிரச்சனை தான் உருவாக்கியது.நான் இவர்கள் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க வேண்டும் தான் நினைத்தேன். ஆனால், அவங்க பிரிந்து அவர் அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து இருப்பதினால் தான் பிரச்சனையே இல்லாமல் இருக்கிறது. பின் அவர்களை சேர்த்து வைத்து திருப்பியும் சண்டை போட்டு கொண்டு இருப்பார்கள் என்று தான் நான் அதை செய்ய வில்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement